வாழ்க்கையில் மிகவும் முக்கியமானப் பயனுள்ளத் தகவல்களை ஓரிடத்தில் வழங்கும் வாழ்க்கை அகராதி இணையத்தின் ANDROID APP DOWNLOAD செய்து பயனடைவீர்.
Labels
- MEDITATION (2)
- phone/Email/Website (5)
- TNPSC (2)
- YOGA (1)
- அழகு குறிப்புகள் (18)
- கணிப்பொறி (85)
- கல்வி (27)
- கீரைகளின்-மருத்துவம் (3)
- கோயில் (2)
- சித்த மருத்துவம் (5)
- சுற்றுலா (5)
- செல்போன் (33)
- தகவல் (63)
- தொலைக்கட்சி (2)
- நகைச்சுவை (2)
- படக் கருத்துக்கள் (2)
- பழங்களின் மருத்துவம் (5)
- போக்குவரத்து (6)
- மத்திய அரசு (1)
- மருத்துவம் (18)
- முதலுதவி (1)
- மூலிகை மருத்துவம் (5)
- வங்கி (2)
- வரலாறு (8)
- வருமான வரி (2)
- விழிப்புணர்வு (1)
Pages
Saturday, 30 August 2014
Tuesday, 19 August 2014
ஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி
ஆன்ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை apk file ஆக ஆன்ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம் .என்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் inernet மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு ..
முதலில் உங்கள் மொபைலில் play store சென்று ES FILE EXPLORER டவுன் லோட் செய்யுங்கள் அல்லது இந்த லிங்playக் சென்று டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள்.
இன்ஸ்டால் செய்ததும் அதை ஓபன் செய்தால் அதில் App Mgr தொடுங்கள்
அடுத்து வரும் விண்டோவில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த ஐகோன் கள் வரிசையாக தோன்றும் அதில் பேக்அப் செய்ய வேண்டிய ஐகோனை 2 வினாடி கள் அழுத்தி வரும் விண்டோவில் பேக்அப் என்பதை தேர்ந்தெடுங்கள் அவ்வளவுதான் பேக்அப் ரெடி
அது உங்கள் எஸ்டி கார்டில் backups /apps என்ற போல்டரில் save ஆகும் இப்படியே ஒவ்வொன்றாக சேவ் செய்யுங்கள் .செவ் செய்த apk file- ஐ நீங்கள் விரும்பும் போது மறுபடியும் இன்டர் நெட் உதவியில்லாமல் இன்ஸ்டால் செய்யலாம் அல்லது நீங்கள் யாருக்கும் share செய்யலாம்.
வெங்காயத்தின் உதவியுடன் ஐபொட்களை சார்ஜ் செய்யலாம்
ஒன்னும் தெரியாதவர்களை வெங்காயம் என ஏளனம் செய்வதுண்டு. ஆனால் அந்த வெங்காயத்தின் மகத்துவம் ஏராளம்.
வைத்தியத்திற்கு மட்டும் தான் என நினைத்து விடாதீர்கள் எம் தொழில்நுட்ப தேவைக்கும் உதவ வந்து விட்டது வெங்காயம்.
1. பெரிய வெங்காயம்
2. ஏதாவது ஒரு சத்து பானம்
3. திருப்புலி
ஜபொட் மற்றும் அதனை வெங்காயத்தோடு இனைக்கும் ஒயர். இது எல்லாவற்றையம் எடுத்த பின்னர் வீடியோவில் காட்டப்படுவது போன்று செய்து 30 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்யுங்கள்.
வீடியோ முகவரி:இங்கு சென்று பாருங்கள்
மொபைல் போன் வரலாறு(History of mobile phones)
மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.
1920: இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.
1947: ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.
1954: காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.
1970: பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.
1973: மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.
1979: ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.
1983: டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.
1984: விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.
1989: மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.
1990: 2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.
1991: அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.
1992: மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.
1996: மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
1997: எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.
2000: இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.
2001: வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.
2002: டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது
2004: மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.
2006: மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.
2007: ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.
2014: எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
Monday, 18 August 2014
இணைய வடிவமைப்புக்கு இலவச ஐகான்கள் வழங்கும் தளம்
வெவ்வேறு அளவுகளிலும் இந்த ஐகானை பெற்று கொள்ளலாம். இந்த ஐகான்கள் ICO மற்றும் PNG பார்மேட்டுகளில் கிடைக்கின்ற.
மொபைல் போன்களுக்கான இலவச chating மென்பொருட்கள்
கையடக்க தொலைபேசிகளுக்கான சில தகவல் தொடர்பாடல்(chating) மென்பொருட்கள் சம்பந்தமான தகவல்கள் தொடர்பான பதிவு இது.இந்த மென்பொருட்கள் மூலமாக நாம் இன்னொருவருடன் குரல் வழியாகவோ(Voice) , தகவல்களை எழுத்து மூலமாக(Text Chat) பகிர்ந்து கொள்ளவோ முடியும். இந்த மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கி கையடக்க தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ள முடியும்.
இவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு கையடக்க தொலைபேசி வழங்குனர்களால் GPRS கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும். இவை மிகவும் செலவு குறைந்த தொடர்பாடல் மென்பொருட்கள் ஆகும். இவற்றினூடாக வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் உறவுகளுடன் மிக குறைந்த செலவில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பாவிக்க வேண்டுமாயின் GPRS வசதியுள்ள கையடக்க தொலைபேசிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
3G,3.5G வசதியுள்ள கையடக்க தொலைபேசிகள் இன்னும் சிறப்பானவை. இத்தகைய கையடக்க தொலைபேசிகள் மூலமாக குரல் வழி தொடர்பினை இலகுவாக மேற்கொள்ளமுடியும்.
இதோ அத்தகைய மென்பொருட்கள் சிலவும் அவற்றின் சுட்டிகளும்.
1. eBuddy - Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.
தரவிறக்க இணையச்சுட்டி: eBuddy

2. Nimbuzz - Skype,facebook, Windows Live Messenger /MSN, Yahoo!, ICQ, AIM, Google Talk, Gadu-Gadu, Hyves போன்றவற்றின் பயனர் மேலும் சில melummmemeதொடர்பாடல்களை மேற்கொள்ள முயும். இது குரல்வழி தொடர்பாடலுக்கு மிக சிறந்த மென்பொருள்.
தரவிறக்க இணையச்சுட்டி: Nimbuzz

3. mig33 - Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.
தரவிறக்க இணையச்சுட்டி: mig33
திரையை படம்பிடிக்கும் மென்பொருள் இலவசம்
விண்டோஸ் திரையில் நடக்கும் நிகழ்வை நீங்கள் உங்கள் வலைப்பதிவில் இணைக்க விரும்பினால் என்ன செய்வீர்கள். உடனே ப்ரிண்ட் ஸ்கீரின் பட்டனை தட்டி பின்னர் மைக்ரோசாப்ட் பெயிண்ட் திறந்து அதில் பேஸ்ட் செய்து பின்னர் jpg பார்மேட்டாக சேமிப்பீர்கள். ஆனால் அதே வீடியோவாக வேண்டும் என்றால் உடனே மாற்று மென்பொருள் தேடவேண்டும். இதை இரண்டும் செய்யும் ஒரெ மென்பொருள் உங்களுக்காக இலவசமாக கீழே கொடுத்துள்ளேன்.
இதன் சிறப்பம்சங்கள் கீழே:
முழுதிரையும் படம்பிடிக்கலாம்
தேவையான விண்டோவை மட்டும் படம்பிடிக்கலாம்.
குறிப்பிட்ட பகுதியை மட்டும் படம் பிடிக்கலாம்.
பின்வரும் பார்மெடுகளாக சேமிக்கலாம். BMP, JPG, GIF, PNG, TIFF, WMV
நேரடியாக மின்னஞ்சலில் இணைத்து அனுப்பலாம்.
நேரடியாக PrtScr பட்டனை தட்டி இதை பெற இயலும்.
முழுவதும் இலவசம்.
வைரஸ் ஆட்-வேர், மால்வேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
Sunday, 17 August 2014
உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்...
அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம்.கையெழுத்தை FONT டாக மாற்றித் தருகிறது . இது ஒரு ஆன்லைன் சேவையாகும்.
கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர் எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான் கையெழுத்து ஒழுங்காக வராதே என்ற கவலையும் வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம்.
சரி, இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம் ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும்.
கையெழுத்தை FONT பைலாக மாற்ற முதலில் www.fontcapture.com எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் FONT டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து அந்த டெம்ப்லேட்டை இணைய தளத்தில் அறிவுறுத்தியிருப்பதன் பிரகாரம் உங்கள் கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ் பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட் செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு FONT பைலாக அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை நேர் செய்ய
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பரந்துவிரிந்த பயன்பாட்டில் உள்ள ஒரு சாதனம் மொபைல் சாதனமே..!ஒவ்வொருவரிடமும் புத்தம் புதிய மாடல்களில் உள்ள ஆண்ட்ராய்ட் மொபைல்கள்( Android Mobiles), சாதாரண மொபைல்கள் (Ordinary Mobiles) என ஏதாவது புதிய நுட்பம் (New Technology Mobiles) கொண்ட ஒரு அலைபேசி இருந்துகொண்டேதான் உள்ளது.
இதில் உள்ள குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வசதி கேமரா (camera) வசதி..
இதன் மூலம் வீடியோக்கள் எடுக்கலாம். (take video)
படங்களை எடுக்கலாம்...
நினைத்த நேரத்தில் உடனே காண்கின்ற காட்சிகளை (Natural Seen) அப்படியே வீடியோவாக எடுப்பது தற்பொழுது உள்ள லேட்டஸ்ட் பேஷன்.அவ்வாறு எடுக்கும் வீடியோவானது சில சமயங்கள் கோணங்களை மாறி, தலைகீழாக எடுத்துவிடுவோம்.இவ்வாறு தவறுதலாக கோணங்களை மாற்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை கணினியில் பார்க்கும்பொழுது தலைகீழாகத் தெரியும்.
தலைகீழாகத் தெரியும் வீடியோக்களை இம்மென்பொருளின் மூலம் கோணங்களை (to change direction of videos) நாமே மாற்ற முடியும். நிரந்தரமாக மாற்றி வீடியோவை சேமிக்க என்ன செய்வது என்று யோசித்த வேளையில், தேடிப்பெற்ற ஒரு மென்பொருள் ஃப்ரீ வீடியோ ரொட்டேட் (Free Video Rotate Software) ஆகும்.
இதில் ஒரு Mouse Click வீடியோக்களை Flip செய்யவோ, அல்லது Rotate செய்யவோ முடியும்.மிகவேகமாக, மிக எளிமையாக இச்செயல்களைச் செய்ய முடியும்.
எந்த எந்த கோணங்களில் வீடியோக்களை சுழற்ற முடியும், எந்தெந்த கோணங்களில் வீடியோக்களை மாற்ற முடியும் என்பதை கீழே பார்க்கலாம்.
Rotate video 180°.
Rotate video 90° CW.
Flip video vertically.
Flip video horizontally.
Flip video vertically and rotate 90° CCW.
Flip video vertically and rotate 90° CW.
இதில் தீங்கிழைக்கும் Malware, Adware போன்ற எந்த ஒரு நிரல்களும் இணைப்படவில்லை என்பது கூடுதல் செய்தி.
இச்சிறப்பு மிகு மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய;
விளையாட்டு பிரியர்களுக்கான மென்பொருள்...
கணணியில் விளையாடுவது ஒரு அலாதியான விசயம். பெரும்பாலானோர் வெற்றி பெறும் வரை வேட்கையோடு விளையாடுவார்கள்.
சிலருக்கு லெவல்களை முடிக்க இயலாமல் தவித்துப் போய் வேறு வழி இருக்கிறதா என்று தேடுவார்கள்.
விளையாட்டுகளில் சில ரகசியச் சொற்களைக் கொடுப்பதன் மூலம் அடுத்த லெவலுக்கு முன்னேறலாம் அல்லது வேறு எதேனும் சக்திகளைப் பெறலாம். இந்த மாதிரி கொடுக்கப்படும் சொற்களே Cheat Codes என்று சொல்லப்படுகிறது. அதாவது விளையாட்டில் குறுக்கு வழியில் முன்னேற இதனைப் பயன்படுத்துவார்கள்.
கணணியில் விளையாடப்படும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் பகிரப்படுகின்றன. குறிப்பிட்ட விளையாட்டுக்கு Cheat codes வேண்டும் என்றால் நீங்கள் அதனை கூகுளில் தேடி கண்டுபிடிக்கலாம்.
இதற்கென இருக்கும் ஒரு மென்பொருள் தான் Cheat Books Database. இதில் 20000க்கும் மேற்பட்ட விளையாட்டுகளின் ரகசியச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சில முக்கியமான இடங்களில் எப்படி விளையாட வேண்டுமென்ற குறிப்புகளும் இதில் தரப்படுகிறது.
இது Database என்ற பெயருக்கேற்ப அனைத்து தகவல்களும் இதன் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் PC, Walkthroughs, Playstation, Playstation 2, Playstation 3, Sega, Nintendo 64, Nintendo DS, DVD, Gameboy Advance, Gameboy Color, N-Gage, Nintendo DS, XBox, XBox 360, iPhone, Gamecube, Dreamcast, Super Nintendo, Wii, Sony PSP போன்ற வெவ்வேறு வகையான கருவிகளில் விளையாடக்கூடிய விளையாட்டுகளின் குறிப்புகள் மற்றும் சீட் கோட்களை ஒரே இடத்தில் தொகுப்பாகப் பார்த்துக் கொள்ள முடியும்.
மேலும் உங்களுக்கு எதேனும் ரகசியச்சொற்கள் தெரிந்திருப்பின் இதிலேயே புதிதாக சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை அப்டேட் செய்து கொண்டால் அண்மைய குறிப்புகள் அனைத்தும் இந்த மென்பொருளில் இணைந்து விடும்.
இதில் எளிதாக விளையாட்டுகளின் வரிசைப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. எளிதாகத் தேடுவதற்கும் வசதியிருக்கிறது. இங்கிருந்தே குறிப்பிட்ட விளையாட்டுக்கு இணையத்திலும் தேடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இலவச மென்பொருள் விளையாட்டுப் பிரியர்கள் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள் ஆகும்.
ஆன்லைனில் இலவசமாக பெறும் 7 விசயங்கள்
தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விசயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஆன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.ஆன்லைன் மூலம் பல தரப்பட்ட விசயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விசயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
ஒரு சில விசயங்களை நீங்கள் ஆன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.
* நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களாwww.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ளwww.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.
* நீங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால்www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.
* சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.com மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.
* ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.
* உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள்www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.
கணினியில் Voice Record அல்லது Sound Record செய்வது எப்படி?
நீங்கள் பேசும் பேச்சு, கவிதை, பாடல்கள் எதுவானாலும் உங்கள் கணினியிலேயே பதிவு செய்து அதை கேட்டு மகிழலாம். CD, Pendriver போன்ற சாதனங்களிலும் பதிந்துவைத்துக்கொள்ள முடியும்.இதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய மற்றொரு சாதனம் HEAD PHONE with mic. பெரும்பாலும் கணினியுடன் சேர்ந்தே கிடைக்கும். இல்லாதவர்கள் ஒரு நல்ல நிறுவனத்தின் தரமான HEAD PHONE with mic -ஐ வாங்கிக்கொள்ளுங்கள். இப்போது மிகக் குறைந்த விலையிலேயே இந்த HEADPHONE சந்தையில் கிடைக்கிறது.
கணினியில் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
HEADPHONE with mic உங்கள் கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள்.
HEADPHONE உங்கள் தலையில் மாட்டிக்கொள்ளவும். நீட்டியிருக்கும் Mic -ஐ உங்கள் வசதிக்கு தக்கவாறு வாயருகே வைத்துக்கொள்ளுங்கள்.
Task Bar-ல் உள்ள Start Button அழுத்துங்கள். அதில்
Programe==>Accessories==>Entertainment==>Sound Recorder என்பதைத் தேர்ந்தெடுங்கள்.(windows xp பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்)
Start==>all Programes==>Accessories==>Sound Recorder என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.( windows7 பயன்படுத்துபவர்களுக்கு)
தோன்றும் விண்டோவில் Start Recording என்பதை(சிவப்பு நிறத்தில் இருப்பதை) அழுத்தவும்.
உடனே உங்கள் கணினியில் ரெங்கார்டிங் start ஆகிவிடும்.
இப்போது நீங்கள் பேசவேண்டியதை பேசி மீண்டும் அந்த சிகப்பு பட்டனை(Stop Recording) அழுத்தும்போது அந்த ஆடியோ கோப்பை சேமிக்க கேட்கும்.
அதில் Yes கொடுத்து நீங்கள் பேசியதை, பாடியதை, வாசித்ததை சேமித்துக்கொள்ளுங்கள்.
கணினியில் குரலை பதிவு(Voice Recording) செய்ய
பதிவு செய்ததை நிறுத்த
உங்கள் கணினியில் சேமித்த Audio file நீங்கள் CD-யில் Burn செய்துகொள்ளலாம். அல்லது பென்டிரைவ்(Pen drive) போன்றவற்றிலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இணையத்தின் மூலம்(Social network) நண்பர்களுக்கும் இந்த Audio file அனுப்பி வைக்கலாம்.
என்ன நண்பர்களே உங்கள் கணினியில் Voice Record அல்லது Sound Record செய்வது எப்படி என்பதை அறிந்துகொண்டீர்களா?
கணினியின் மவுஸ் பற்றிய சில டிப்ஸ்கள்!
கணினி பயன்படுத்தும்போது மவுஸ் பற்றிய முழுமையான பயனை நாம் அறிந்துகொள்வதில்லை.குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
இதோ அதன் பயன்கள்:
பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட,Mouse +Shift Key பயன்படுத்த இடம் தருகின்றன.
தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் கிளிக் செய்திடவும். பின்னர்,Shift Keyஅழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப்போது நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
இந்த வகையில் Alt Key வேறு ஒரு வகையான வசதியைத் தருகிறது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம்.
டேபிள் நெட்டு வரிசை, பாராவில் பாதி எனத் தேர்ந்தெடுக்கையில், இந்த பயன்பாடு அதிகம் உதவும். டாகுமெண்ட் பக்கங்களின் ஊடாகச் செல்ல, தற்போது மவுஸின் ஸ்குரோல் வீலை அனைவரும் பயன்படுத்துகிறோம்.
இந்த ஸ்குரோல் வீலை இன்னும் சில பணிகளுக்குப் பயன்படுத்தலாம். மவுஸின் ஸ்குரோல் வீல், ஒரு வீலாக மட்டுமல்ல, பட்டனாகவும் பயன்படுகிறது. மவுஸின் மூன்றாவது பட்டனாக இது செயல்படுகிறது.
இதனை அழுத்தினால், அது மவுஸின் மூன்றாவது பட்டனாகத் தனிப்பட்ட செயல்பாட்டினைத் தரும். இதனைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றில் கிளிக் செய்து, இணையப்பக்கத்தினைத் திறக்கலாம்.
பிரவுசரின் மேலாக இணையதளங்களுக்கான டேப்பில் வீலை அழுத்தினால், அந்த இணைய தளம் மூடப்படும்.
இணைய தளப் பக்கம், வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் போன்றவற்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், பெரிதாகவும், சிறியதாகவும் (zoom in and zoom out) காட்டப்படும்.
Shift Key அழுத்திக் கொண்டு, இணையப் பக்கங்களில், மேலும் கீழுமாக ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்களிடையே மேலும் கீழுமாகச் செல்லலாம்.
சில மவுஸ் வீல்களை, இடது வலதாகவும் நகர்த்தி, இணையப் பக்கத்தில் மேலும் கீழுமாகச் செல்லலாம். இரண்டு மற்றும் மூன்று முறை Click: எந்த சொல்லையும், அதன் மீது டபுள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். முழு வாக்கியத்தை அல்லது பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள ஒரு சொல்லில் மவுஸை வைத்து, மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்து, அப்படியே இடது வலதாக இழுத்தால், ஒவ்வொரு சொல்லாக தேர்ந்தெடுக்கப்படும்.
பென்ட்ரைவில் உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க
ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு இலவச சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் உள்ளது.
இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.
இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.
அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,
தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.
Subscribe to:
Comments (Atom)
dd.jpg)









