Sunday, 17 August 2014

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்...





அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம்.கையெழுத்தை FONT டாக மாற்றித் தருகிறது . இது ஒரு ஆன்லைன் சேவையாகும்.

கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர் எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான் கையெழுத்து ஒழுங்காக வராதே என்ற கவலையும் வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம்.


சரி, இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம் ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும்.


கையெழுத்தை FONT பைலாக மாற்ற முதலில் www.fontcapture.com எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் FONT டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.

YourFonts - Home

அடுத்து அந்த டெம்ப்லேட்டை இணைய தளத்தில் அறிவுறுத்தியிருப்பதன் பிரகாரம் உங்கள் கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ் பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட் செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு FONT பைலாக அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை நேர் செய்ய



இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பரந்துவிரிந்த பயன்பாட்டில் உள்ள ஒரு சாதனம் மொபைல் சாதனமே..!ஒவ்வொருவரிடமும் புத்தம் புதிய மாடல்களில் உள்ள ஆண்ட்ராய்ட் மொபைல்கள்( Android Mobiles), சாதாரண மொபைல்கள் (Ordinary Mobiles) என ஏதாவது புதிய நுட்பம் (New Technology Mobiles) கொண்ட ஒரு அலைபேசி இருந்துகொண்டேதான் உள்ளது.




இதில் உள்ள குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வசதி கேமரா (camera) வசதி..

இதன் மூலம் வீடியோக்கள் எடுக்கலாம். (take video)



படங்களை எடுக்கலாம்...




நினைத்த நேரத்தில் உடனே காண்கின்ற காட்சிகளை (Natural Seen) அப்படியே வீடியோவாக எடுப்பது தற்பொழுது உள்ள லேட்டஸ்ட் பேஷன்.அவ்வாறு எடுக்கும் வீடியோவானது சில சமயங்கள் கோணங்களை மாறி, தலைகீழாக எடுத்துவிடுவோம்.இவ்வாறு தவறுதலாக கோணங்களை மாற்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை கணினியில் பார்க்கும்பொழுது தலைகீழாகத் தெரியும்.

தலைகீழாகத் தெரியும் வீடியோக்களை இம்மென்பொருளின் மூலம் கோணங்களை (to change direction of videos) நாமே மாற்ற முடியும். நிரந்தரமாக மாற்றி வீடியோவை சேமிக்க என்ன செய்வது என்று யோசித்த வேளையில், தேடிப்பெற்ற ஒரு மென்பொருள் ஃப்ரீ வீடியோ ரொட்டேட் (Free Video Rotate Software) ஆகும்.

இதில் ஒரு Mouse Click வீடியோக்களை Flip செய்யவோ, அல்லது Rotate செய்யவோ முடியும்.மிகவேகமாக, மிக எளிமையாக இச்செயல்களைச் செய்ய முடியும்.

எந்த எந்த கோணங்களில் வீடியோக்களை சுழற்ற முடியும், எந்தெந்த கோணங்களில் வீடியோக்களை மாற்ற முடியும் என்பதை கீழே பார்க்கலாம்.

Rotate video 180°.
Rotate video 90° CW.
Flip video vertically.
Flip video horizontally.
Flip video vertically and rotate 90° CCW.
Flip video vertically and rotate 90° CW.

இதில் தீங்கிழைக்கும் Malware, Adware போன்ற எந்த ஒரு நிரல்களும் இணைப்படவில்லை என்பது கூடுதல் செய்தி.

இச்சிறப்பு மிகு மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய;

விளையாட்டு பிரியர்களுக்கான மென்பொருள்...



கணணியில் விளையாடுவது ஒரு அலாதியான விசயம். பெரும்பாலானோர் வெற்றி பெறும் வரை வேட்கையோடு விளையாடுவார்கள்.
சிலருக்கு லெவல்களை முடிக்க இயலாமல் தவித்துப் போய் வேறு வழி இருக்கிறதா என்று தேடுவார்கள்.
விளையாட்டுகளில் சில ரகசியச் சொற்களைக் கொடுப்பதன் மூலம் அடுத்த லெவலுக்கு முன்னேறலாம் அல்லது வேறு எதேனும் சக்திகளைப் பெறலாம். இந்த மாதிரி கொடுக்கப்படும் சொற்களே Cheat Codes என்று சொல்லப்படுகிறது. அதாவது விளையாட்டில் குறுக்கு வழியில் முன்னேற இதனைப் பயன்படுத்துவார்கள்.

கணணியில் விளையாடப்படும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் பகிரப்படுகின்றன. குறிப்பிட்ட விளையாட்டுக்கு Cheat codes வேண்டும் என்றால் நீங்கள் அதனை கூகுளில் தேடி கண்டுபிடிக்கலாம்.
இதற்கென இருக்கும் ஒரு மென்பொருள் தான் Cheat Books Database. இதில் 20000க்கும் மேற்பட்ட விளையாட்டுகளின் ரகசியச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சில முக்கியமான இடங்களில் எப்படி விளையாட வேண்டுமென்ற குறிப்புகளும் இதில் தரப்படுகிறது.
இது Database என்ற பெயருக்கேற்ப அனைத்து தகவல்களும் இதன் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் PC, Walkthroughs, Playstation, Playstation 2, Playstation 3, Sega, Nintendo 64, Nintendo DS, DVD, Gameboy Advance, Gameboy Color, N-Gage, Nintendo DS, XBox, XBox 360, iPhone, Gamecube, Dreamcast, Super Nintendo, Wii, Sony PSP போன்ற வெவ்வேறு வகையான கருவிகளில் விளையாடக்கூடிய விளையாட்டுகளின் குறிப்புகள் மற்றும் சீட் கோட்களை ஒரே இடத்தில் தொகுப்பாகப் பார்த்துக் கொள்ள முடியும்.
மேலும் உங்களுக்கு எதேனும் ரகசியச்சொற்கள் தெரிந்திருப்பின் இதிலேயே புதிதாக சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை அப்டேட் செய்து கொண்டால் அண்மைய குறிப்புகள் அனைத்தும் இந்த மென்பொருளில் இணைந்து விடும்.
இதில் எளிதாக விளையாட்டுகளின் வரிசைப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. எளிதாகத் தேடுவதற்கும் வசதியிருக்கிறது. இங்கிருந்தே குறிப்பிட்ட விளையாட்டுக்கு இணையத்திலும் தேடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இலவச மென்பொருள் விளையாட்டுப் பிரியர்கள் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள் ஆகும்.

ஆன்லைனில் இலவசமாக பெறும் 7 விசயங்கள்



தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விசயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஆன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.ஆன்லைன் மூலம் பல தரப்பட்ட விசயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விசயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.


ஒரு சில விசயங்களை நீங்கள் ஆன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.

* நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களாwww.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ளwww.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.

* நீங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால்www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

* எதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவர்கள்www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.

* சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.com மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.

* ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.

* உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள்www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.

* நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால்www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.

கணினியில் Voice Record அல்லது Sound Record செய்வது எப்படி?



நீங்கள் பேசும் பேச்சு, கவிதை, பாடல்கள் எதுவானாலும் உங்கள் கணினியிலேயே பதிவு செய்து அதை கேட்டு மகிழலாம். CD, Pendriver போன்ற சாதனங்களிலும் பதிந்துவைத்துக்கொள்ள முடியும்.இதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய மற்றொரு சாதனம் HEAD PHONE with mic. பெரும்பாலும் கணினியுடன் சேர்ந்தே கிடைக்கும். இல்லாதவர்கள் ஒரு நல்ல நிறுவனத்தின் தரமான HEAD PHONE with mic -ஐ வாங்கிக்கொள்ளுங்கள். இப்போது மிகக் குறைந்த விலையிலேயே இந்த HEADPHONE சந்தையில் கிடைக்கிறது.




கணினியில் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
HEADPHONE with mic உங்கள் கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள்.

HEADPHONE உங்கள் தலையில் மாட்டிக்கொள்ளவும். நீட்டியிருக்கும் Mic -ஐ உங்கள் வசதிக்கு தக்கவாறு வாயருகே வைத்துக்கொள்ளுங்கள்.

Task Bar-ல் உள்ள Start Button அழுத்துங்கள். அதில்

Programe==>Accessories==>Entertainment==>Sound Recorder என்பதைத் தேர்ந்தெடுங்கள்.(windows xp பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்)

Start==>all Programes==>Accessories==>Sound Recorder என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.( windows7 பயன்படுத்துபவர்களுக்கு)

தோன்றும் விண்டோவில் Start Recording என்பதை(சிவப்பு நிறத்தில் இருப்பதை) அழுத்தவும்.
உடனே உங்கள் கணினியில் ரெங்கார்டிங் start ஆகிவிடும்.

இப்போது நீங்கள் பேசவேண்டியதை பேசி மீண்டும் அந்த சிகப்பு பட்டனை(Stop Recording) அழுத்தும்போது அந்த ஆடியோ கோப்பை சேமிக்க கேட்கும்.

அதில் Yes கொடுத்து நீங்கள் பேசியதை, பாடியதை, வாசித்ததை சேமித்துக்கொள்ளுங்கள்.

கணினியில் குரலை பதிவு(Voice Recording) செய்ய

பதிவு செய்ததை நிறுத்த

உங்கள் கணினியில் சேமித்த Audio file நீங்கள் CD-யில் Burn செய்துகொள்ளலாம். அல்லது பென்டிரைவ்(Pen drive) போன்றவற்றிலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இணையத்தின் மூலம்(Social network) நண்பர்களுக்கும் இந்த Audio file அனுப்பி வைக்கலாம்.

என்ன நண்பர்களே உங்கள் கணினியில் Voice Record அல்லது Sound Record செய்வது எப்படி என்பதை அறிந்துகொண்டீர்களா?

கணினியின் மவுஸ் பற்றிய சில டிப்ஸ்கள்!



கணினி பயன்படுத்தும்போது மவுஸ் பற்றிய முழுமையான பயனை நாம் அறிந்துகொள்வதில்லை.குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர்.



இதோ அதன் பயன்கள்:

பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட,Mouse +Shift Key பயன்படுத்த இடம் தருகின்றன.

தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் கிளிக் செய்திடவும். பின்னர்,Shift Keyஅழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும்.

எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப்போது நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

இந்த வகையில் Alt Key வேறு ஒரு வகையான வசதியைத் தருகிறது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம்.

டேபிள் நெட்டு வரிசை, பாராவில் பாதி எனத் தேர்ந்தெடுக்கையில், இந்த பயன்பாடு அதிகம் உதவும். டாகுமெண்ட் பக்கங்களின் ஊடாகச் செல்ல, தற்போது மவுஸின் ஸ்குரோல் வீலை அனைவரும் பயன்படுத்துகிறோம்.

இந்த ஸ்குரோல் வீலை இன்னும் சில பணிகளுக்குப் பயன்படுத்தலாம். மவுஸின் ஸ்குரோல் வீல், ஒரு வீலாக மட்டுமல்ல, பட்டனாகவும் பயன்படுகிறது. மவுஸின் மூன்றாவது பட்டனாக இது செயல்படுகிறது.

இதனை அழுத்தினால், அது மவுஸின் மூன்றாவது பட்டனாகத் தனிப்பட்ட செயல்பாட்டினைத் தரும். இதனைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றில் கிளிக் செய்து, இணையப்பக்கத்தினைத் திறக்கலாம்.

பிரவுசரின் மேலாக இணையதளங்களுக்கான டேப்பில் வீலை அழுத்தினால், அந்த இணைய தளம் மூடப்படும்.

இணைய தளப் பக்கம், வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் போன்றவற்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், பெரிதாகவும், சிறியதாகவும் (zoom in and zoom out) காட்டப்படும்.

Shift Key அழுத்திக் கொண்டு, இணையப் பக்கங்களில், மேலும் கீழுமாக ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்களிடையே மேலும் கீழுமாகச் செல்லலாம்.

சில மவுஸ் வீல்களை, இடது வலதாகவும் நகர்த்தி, இணையப் பக்கத்தில் மேலும் கீழுமாகச் செல்லலாம். இரண்டு மற்றும் மூன்று முறை Click: எந்த சொல்லையும், அதன் மீது டபுள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். முழு வாக்கியத்தை அல்லது பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள ஒரு சொல்லில் மவுஸை வைத்து, மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்து, அப்படியே இடது வலதாக இழுத்தால், ஒவ்வொரு சொல்லாக தேர்ந்தெடுக்கப்படும்.

பென்ட்ரைவில் உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க




ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு இலவச சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் உள்ளது.


இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.


                           


இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.


                                   






அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.


                             



அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,


                                      




தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.


                   




ஒரே கிளிக்கில் Internet Cookies களை அழிக்க இலவச மென்பொருள்




நாம் பயன்படுத்தும் internet explorer மெதுவாக இயங்குவதற்கு காரணம் cookies தான் அதனை அழிப்பதற்கு start > run > %TEMP%  இதில் சென்று தான் அழிப்பார்கள்,clean quick என்பதனை க்ளிக் செய்ததும் உங்கள் கணிபொறியில் உள்ள cookies எல்லாம் clean செய்யப்படுகிறது இன்னும் சில பேர் cc cleaner ஐ பயன்படுத்தியும் அழிப்பார்கள் cc - cleaner ஐ விட அதிவேகத்தில் cookies களை அழிக்கும் இந்த மென்பொருள்  இன்னும் அதிகமான பயன்பாடுகளை கொண்டது.




free internet eraser


இதன் முலமாக நம் கணிபொறியும் வேகமாக செயல்படும்.பயன்படுத்தி பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்


                                                           டவுன்லோட் செய்ய இங்கு செல்லவும்

உங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் பெயரை வைப்பது எப்படி?...



உங்கள் கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் இருக்க வேண்டும். அல்லது உங்கள் குடும்பத்தில் உங்களுக்குப் பிடித்தவர் யார் பெயரிலாவது இருக்க வேண்டும். எனவே எப்படியும் ஒரு பெயரில் கம்ப்யூட்டர் இயங்கும்.இதனை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு வேளை உங்களுக்கு இப்போதுதான் திருமணமாகி உங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் மனைவியின் பெயரை வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். எங்கு சென்று மாற்றுவது? என்ற கேள்விக்கு விடை பார்ப்போமா?

மானிட்டர் திரையில் My Computer என்று ஒரு ஐகான் இருக்கிறதல்லவா? அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Properties என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்தால் பல டேப்கள் கொண்ட விண்டோ ஒன்று கிடைக்கும்.


இதில்Computer Name என்ற டேபின் மீது கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைக் கவனியுங்கள். இந்த திரையில் Computer Description என்று ஒரு இடம் தெரியும். இதன் நேர் எதிரில் உள்ள கட்டத்தில் இந்த கம்ப்யூட்டர் குறித்த ஒரு சிறு விளக்கம் இருக்கும். இல்லை என்றால் நீங்கள் அமைக்கலாம்.


                                            

இதில் மை ஆபீஸ் கம்ப்யூட்டர் அல்லது மை கிச்சன் கம்ப்யூட்டர் என்று உங்களுக்குப் பிடித்த கம்ப்யூட்டர் குறித்த விளக்கத்தினைத் தரலாம். ஆனால் இது கம்ப்யூட்டரின் பெயர் ஆகாது. இதன் கீழாகக்Full Computer Name என்று இருக்கும்.


இதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றால் அருகில் உள்ளChange என்பதில் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் உள்ள கட்டத்தில் பெயரை டைப் செய்து ஓகே கிளிக் செய்திட கம்ப்யூட்டரின் பெயர் நீங்கள் டைப் செய்ததற்கேற்றபடி மாற்றப்பட்டு காட்டப்படும்.