Tuesday, 12 August 2014

பென் ட்ரைவில் இருந்த கோப்புகளைக் காணோமா?




படிப்பின் தேவைக்கோ பணியின் தேவைக்கோ பென் ட்ரைவ்களையும், எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க்குகளையும் பயன்படுத்துகிறோம். நாம் அவற்றைப் பல கணினிகளிலும் மடிக்கணினிகளிலும் பயன் படுத்துவோம். அப்போது நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்திவிடுவோம்.

பல நாட்கள் உழைத்துச் சேகரித்த ஆவணங்கள் உள்ளிட்டு பெரும்பாலும் நமது அதிமுக்கியமான கோப்புகளை நாம் பென் ட்ரைவ்களில் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றைப் பயன்படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவைச் சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த கோப்புகள் எல்லாம் காணாமல் போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள அவற்றின் ஷார்ட் கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.
ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள எல்லாம் போய்விட்டது என்று முடிவு செய்துவிடுவார்கள். அதனால் பென் ட்ரைவை பார்மெட்கூட செய்துவிடுவார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்று தலையில் கை வைத்து அமர்வார்கள்.

கவலை வேண்டாம்.
இழந்த கோப்புகளை மீட்டெடுக்க ஒரு வழி இருக்கிறது.

முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS promptக்குச் செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி, அந்தக் குறிப்பிட்ட ட்ரைவிற்குச் செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் (நாம் இழந்ததாக கருதிய) அனைத்து கோப்புகளும் hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? DOS prompt -ல் இருந்து கொண்டு,Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையைக் கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புகள் மீட்கப்பட்டுவிடும். பிறகு தேவையற்ற ஷார்ட் கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள்.

​குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணங்களும் அதிலிருந்து அவர்களை மீட்கும் வழிமுறைகளும் !




குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் உம் மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும்ஆத்திரமாகவும் வெளிக்காட்டு வார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இத ற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவையாவன;


1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள்வாக்கு வாதங்கள்.

2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்

4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்

5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப் பிராணிகளின் இறப்பு

6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்

7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள்தொற்றுநோய்கள்

8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம்பிடிவாதம்

10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்

11. பெற்றோரைப் பாதிக்கும் மன உணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்

இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகு விரைவில் மன அழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

நீங்கள் செய்ய வேண்டியவை

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு வி ரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும்அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர் கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்து ம். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறி வதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங் கள் மிகவும் முக்கியமானவை.

அவையாவன;

1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது,ஆனால் செயல்படுத்துவது கடினம்.

2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும்போது நடுவே குறுக்கிடுவது எனக்கு அப்பவே தெரியும் என்பதுஅது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பதுசரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.

3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தை களின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோஎண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.

5. ஆதரவு வார்த்தைகள்நம்பிக் கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத் தை ஏற்படுத்த வேண்டும்.

6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவ னித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள்தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

இந்த எண்ணம் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும். இவ்வாறு அவர்களுடன் கலந்து ரையாடி மனஅழுத்தத்திற்கான கார ணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.

மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்

1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.

2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஒத்துழைப்பை நீங்கள் பெற முடியும்.

3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால்அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.

4. தேவைப்பட்ட மாறுதல்களை உண் டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாண வனை விலக்கஉங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பதுபுதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதுபுதிய விளையாட்டுக்களில் ஈடு படுத்துவதுவளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.

5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும்உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந் தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.

6. பெற்றோரின் மரணம்விவாகரத்துஎதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மன அழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்டகால சிகிச்சைக்குப் பிறகே நோயிலி ருந்து விடுபடுவார்கள்.

7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மன அழுத்தத்தை அதிகமாக்கு கிறதுஎந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.

8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்குசொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.

9. தோல்விகளும்துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமான தோ,அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.

10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற வாய்ப்புக்களை ஏற்படு த்திக் கொடுங்கள்.

11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் கார ணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சைபோன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.

12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போதுசரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.

13. தேவைப்பட்டபோது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம்சிறுநீர்ஆகியவற்றை பரிசோதித் துக் கொள்ளுங்கள்.

14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகை களை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.

15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பதுஓடுவதுபோன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்ச லைக் குறையுங்கள்.

16. மேற்கண்ட முறைகளை கடைப் பிடித்த பிறகும்மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும்காலதாமதம் செய்யாம லும் நாடுங்கள்.

17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டுவிஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.

18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம்ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.

19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துமற்றவர்களின் வீண் பேச்சை அலட்சியம் செய்வதேகுழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளு ங்கள்.

20. உண்மையில் உங்களது நண்பர்களும்உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.

கேரட் – மருத்துவ குணங்கள்..!!




கேரட்டில் உள்ள மருத்துவ குணங்கள்..!!
கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.
கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது.
பொதுவாக அனைத்து வீடுகளில் சமைக்கக் கூடிய கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரங்களை இப்போது பார்ப்போம்.
100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:
சக்தி 41 கலோரிகள்
கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
சர்க்கரை 5 கிராம்
நார்சத்து 3 கிராம்
கொழுப்புச் சத்து 0.2 கிராம்
புரோட்டின் 1 கிராம்
வைட்டமின் A – 93% (835 மைக்ரோ கிராம்)
பீட்டா கரோட்டின் – 77% (8285 மைக்ரோ கிராம்)
வைட்டமின் B1 – 3% (0.04 மில்லி கிராம்)
வைட்டமின் B2 – 3% (0.05 மில்லி கிராம்)
வைட்டமின் B3 – 8% (1.2 மில்லி கிராம்)
வைட்டமின் B6 – 8% (0.1 மில்லி கிராம்)
வைட்டமின் B9 – 5% (9 மைக்ரோ கிராம்)
வைட்டமின் C – 12% (7 மில்லி கிராம்)
கால்சியம் – 3% (33 மில்லி கிராம்)
இரும்புச் சத்து – 5% (0.66 மில்லி கிராம்)
மங்கனீஷ் – 5% (18 மில்லி கிராம்)
பாஸ்பரஸ் – 5% (35 மில்லி கிராம்)
பொட்டாசியம் – 5% (240 மில்லி கிராம்)
சோடியம் 2.4 மில்லி கிராம்

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் “ஏ” விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள பாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா பெர்ணாண்டஸ் கூறியதாவது: இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.

ஒரு வீடு எப்படி எல்லாம் பராமரிக்கலாம் என்பது குறித்து டிப்ஸ்...






வீட்டை பராமரிக்கும் அழகை வைத்தே ஒரு பெண்ணின் செயல்பாட்டையும், வீட்டின் தூய்மையையும் எடை போட்டு விடமுடியும்!

சில வீடுகளில் வரவேற்பு அறை மட்டும் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் சமையலறைக்குள் சென்றால் முகத்தை சுளிக்க வைக்கும். வீட்டை பராமரிப்பது பிரத்யேக கலை. ஒரு வீடு எப்படி எல்லாம் பராமரிக்கலாம் என்பது குறித்து டிப்ஸ்.

வீட்டின் அமைப்பு, பாதுகாப்பு, சவுகரியம், அலங்காரம் ஆகிய மற்ற சமாசாரங்கள் எல்லாம் அப்புறம்தான். இரு வேளையும் அடுப்புமேடையை (சிங்க் உட்பட) நன்றாக துடையுங்கள். தினம் தரையையும், வாரம் ஒருமுறை சமையலறை ஜன்னல்களையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள். சமைக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் சிங்க்கை ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாத்திரங்களை உடனுக்குடன் கழுவிவைப்பது நல்லது. தினந்தோறும் சேரும் குப்பையை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள்.

குளியலறையில் ஆடை, துண்டு போடுவதற்கு ஆங்கர் இருப்பது போல் சமையலறையிலும் ஒரு கொக்கியை பொருத்துங்கள். அடுப்பு துடைக்க, கை துடைக்க தனித்தனி துணிகளை உபயோகியுங்கள். அவற்றை அவ்வப்போது அலசி உலர்த்துங்கள். முடிந்தவரை தேய்த்த பாத்திரங்களை துணி கொண்டு துடைத்து அடுக்குங்கள். இரும்பு வாணலி, தோசைக்கல், ஆகியவற்றை அவசியம் துடைத்து வைக்கவும். எக்காரணம் கொண்டு விரித்த தலையுடன் சமைக்க வேண்டாம். சோம்பல் படாமல், மாதம் ஒரு முறை கிச்சன் பல்பைக் கழட்டித் துடையுங்கள்.

எறும்பு பவுடர், கரப்பான் பூச்சி தொல்லையை தடுக்க மருந்து தெளிப்பது ஆகியவற்றை செய்து அதன் மீது பேப்பரை போட்டு வையுங்கள். இப்படி செய்வதால், மருந்துகளின் நெடி சமான்களில் ஏறாது. குழந்தைகளும் தொட வாய்ப்பில்லை. சமையல் செய்யும்போது கண்டிப்பாக எக்சாஸ்ட் பேன் பயன்படுத்தவேண்டும். அடுப்பு உள்ள பகுதிக்கு மேல் அலமாரியில் இரும்பு பாத்திரங்களை கவிழ்ந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பருப்பு வகைகள் கொண்ட பிளாஸ்டிக் சாமான்களை வைக்காதீர்கள். பிசுக்கு ஏறும். இதுபோன்ற சின்ன, சின்ன விஷயங்களை உங்கள் சமையலறைக்கும் மேலும் மெருகூட்டும். இதுபோன்று உங்கள் வீட்டில் தொடர்ந்து ஸ்மார்ட் வர்க் செய்தால் நீங்களும் கிச்சன் கில்லாடிதான்.

இளநீரின் மருத்துவ குணம் !




கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.

இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.

இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது

நாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள்



வ.எண்ஆண்டுபடைப்பாளர்பரிவுத்தொகைகுறிப்பு
011963பாரதியார்
1949 இல் அரசால் உரிமைகள் வாங்கப்பட்டன. 1963 இல் நாட்டுடைமையாக்கப்பட்டன.[1]
021984
2006
ம.பொ.சிவிடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும் ஒரு இலட்சம்
மற்ற அனைத்துப் படைப்புகளுக்கும் 20 இலட்சம்
1984இல் விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலும்
2006 இல் பிற அனைத்துப் படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன
031990பாரதிதாசன்10 இலட்சம்
041995அண்ணாத்துரை75 இலட்சம்இவர் எழுதிய ஆரிய மாயைஎன்னும் நூல் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.
051998பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்10 லட்சம்
061996தேவநேயப் பாவாணர்20 லட்சம்
071997மறைமலையடிகள்30 லட்சம்
081998திரு. வி. கலியாணசுந்தரனார்20 லட்சம்
091998கல்கி20 லட்சம்
101998கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை5 லட்சம்
111998ப. ஜீவானந்தம்5 லட்சம்
121998நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை5 லட்சம்
131998வ.உ. சிதம்பரனார்5 லட்சம்
141998ஏ. எஸ். கே.5 லட்சம்இவர் திருமணம் ஆகாதவர். எனவே மரபுரிமையர் ஒருவரும் இல்லாததால் பரிவுத் தொகை வழங்கப்படவில்லை
151998வ. ராமசாமி5 லட்சம்இவருக்கு மரபுரிமையர் ஒருவரும் இல்லாததால் பரிவுத்தொகை வழங்கப்படவில்லை
161998நாவலர் சோமசுந்தர பாரதியார்5 லட்சம்
171998கா. மு. ஷெரீப்5 லட்சம்
181998பரலி சு. நெல்லையப்பர்5 லட்சம்
191998வ. வே. சுப்பிரமணியம் ( வ.வே.சு. ஐயர் )5 லட்சம்
201998காரைக்குடி சா. கணேசன்5 லட்சம்
211998ச. து. சு. யோகி5 லட்சம்
222000வெ. சாமிநாத சர்மா5 லட்சம்
232000கவிஞர் முடியரசன்10 லட்சம்
242000தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி10- லட்சம்
252000சாமி சிதம்பரனார்10 லட்சம்
262001பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை10 லட்சம்
272002புதுமைப்பித்தன்5 லட்சம்
282002கு.ப.சேது அம்மாள்5 லட்சம்
292004நாவலர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார்5 லட்சம்
302004க. நா. சுப்ரமண்யம்5 லட்சம்
312004ந. பிச்சமூர்த்தி5 லட்சம்
322006புலவர் குழந்தை10 லட்சம்இவர் இயற்றிய இராவண காவியம் என்னும் நூல் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.
332006பரிதிமாற் கலைஞர் (திரு. வி.கோ. சூரியநாராயண சாத்திரி)15 லட்சம்
342006-7திரு. கா. சு. பிள்ளை6 லட்சம்
372006-7புலவர் குலாம் காதிறு நாவலர்6 லட்சம்
382006-7தி. வை. சதாசிவ பண்டாரத்தார்6 லட்சம்
392006-7முனைவர் சி. இலக்குவனார்6 லட்சம்
402006-7மகாவித்வான் எம். எம். தண்டபாணி தேசிகர்6 இலட்சம்
412006-7தி. ச. ரங்கநாதன் ( தி.ஜ.ர. )6 லட்சம்
422006-7நாரண துரைக்கண்ணன்6 லட்சம்
432006-7முனைவர் மா. இராசமாணிக்கம்6 லட்சம்
442006-7முனைவர் வ. சுப. மாணிக்கம்6 லட்சம்
452006-7புலவர் கா. கோவிந்தன்6 லட்சம்
462006-7சக்தி வை. கோவிந்தன்6 இலட்சம்
472006-7தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்6 லட்சம்
482006-7த. நா. குமாரசாமி6 இலட்சம்
492006-7மாயூரம் வேதநாயகம் பிள்ளை6 இலட்சம்
502007-8ம. சிங்காரவேலர்6 இலட்சம்
512007-8குன்றக்குடி அடிகளார்

522007-8கி. ஆ. பெ. விசுவநாதம்

532007-8கி. வா. ஜகந்நாதன்

542007-8ஔவை துரைசாமி

552007-8அ. ச. ஞானசம்பந்தன்

562007-8திருக்குறள் முனுசாமி

572007-8உவமைக்கவிஞர் சுரதா

582007-8சாவி

592007-8மாவெண்கோ என்ற வ. கோ. சண்முகம்

602007-8தீபம் நா. பார்த்தசாரதி

612007-8எசு. எசு. தென்னரசு

622007-8சி. பி. சிற்றரசு

632007-8ஏ. வி. பி. ஆசைத்தம்பி
இவர் எழுதிய காந்தியார் சாந்தியடைய என்னும் நூல் 1950ஆம் ஆண்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.
642007-8டி. கே. சீனிவாசன்

652007-8இராம. அரங்கண்ணல்

662007-8கவிஞர் வாணிதாசன்

672007-8கவிஞர் கருணானந்தம்

682007-8மருதகாசி

692007-8சலகண்டபுரம் ப. கண்ணன்

702008-9கவிஞர் ம. ப. பெரியசாமித்தூரன்

712008-9பேராசிரியர் க. வெள்ளை வாரணனார்

722008-9பண்டித க. அயோத்திதாசர்

732008-9ஆபிரகாம் பண்டிதர்

742008-9சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்

752008-9முனைவர் ரா. பி. சேதுப்பிள்ளை

762008-9மகாவித்வான் இரா. இராகவையங்கார்

772008-9உடுமலை நாராயண கவி|
782008-9கு. மு. அண்ணல் தங்கோ

792008-9அவ்வை தி. க. சண்முகம்

802008-9விந்தன்

812008-9இலா. ச. இராமாமிர்தம்|
822008-9வல்லிக்கண்ணன்

832008-9நா. வானமாமலை

842008-9கவிஞர் புதுவை சிவம்

852008-9அ. இராகவன்

862008-9தொ. மு. சிதம்பர ரகுநாதன்
இவர் எழுதிய முதலிரவுஎன்னும் புதினம் 1955ஆம் ஆண்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டது.
872008-9சக்திதாசன் சுப்பிரமணியன்

882008-9முனைவர் ந. சஞ்சீவி

892008-9முல்லை முத்தையா

902008-9கவிஞர் எசு. டி. சுந்தரம்

912008-9கவிஞர் மீரா என்னும் மீ. ராசேந்திரன்

922008-9பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார்

932008-9புலவர் முகமது நயினார் மரைக்காயர்

942008-9சு. சமுத்திரம்

952008-9கோவை இளஞ்சேரன்

962008-9பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்

972008பாவலரேறு பெருஞ்சித்திரனார்

982009-10குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாஐந்து இலட்சம்
992009-10பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார்ஐந்து இலட்சம்
1002009-10பம்மல் சம்பந்தனார்மூன்று இலட்சம்
1012009-10சிதம்பரநாதன் செட்டியார்மூன்று இலட்சம்
1022009-10மு. சி. பூரணலிங்கம் பிள்ளைமூன்று இலட்சம்
1032009-10தொ.மு. பாசுகரத் தொண்டைமான்மூன்று இலட்சம்
1042009-10பாலூர் து. கண்ணப்ப முதலியார்மூன்று இலட்சம்
1052009-10முனைவர் ச. அகத்தியலிங்கம்ஐந்து இலட்சம்
1062009-10பாவலர் நாரா. நாச்சியப்பன்|ஐந்து இலட்சம்|
1072009-10புலியூர்க் கேசிகன்ஐந்து இலட்சம்
1082009-10வை. மு. கோதைநாயகிமூன்று இலட்சம்
1092009-10சின்ன அண்ணாமலைஐந்து இலட்சம்
1102009-10என். வி. கலைமணிமூன்று இலட்சம்
1112009-10கவிஞர் முருகு சுந்தரம்மூன்று இலட்சம்
1122009-10புலவர் த. கோவேந்தன்மூன்று இலட்சம்
1132009-10அ. க. நவநீதக்கிருட்டிணன்மூன்று இலட்சம்
1142009-10வடுவூர் துரைசாமி அய்யங்கார்ஐந்து இலட்சம்
1152009-10பேரா. மு. இராகவையங்கார்ஐந்து இலட்சம்
1162009-10பூவை. எசு. ஆறுமுகம்மூன்று இலட்சம்
1172009-10பேரா. வையாபுரிப்பிள்ளைமூன்று இலட்சம்
1182009-10இராய சொக்கலிங்கம்ஐந்து இலட்சம்
1192009-10இராசம் கிருட்டிணன்மூன்று இலட்சம்உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவரது வேண்டுகோளை ஏற்று, சிறப்புத் தேர்வாகக் கருதி அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, மரபுரிமையர் ஒருவருமில்லாத காரணத்தால் இவருக்கு பரிவுத் தொகை வழங்கப்பட்டது.
1202009-10மணவை முசுதபா
சிறப்புத் தேர்வு
1212010-11பேரா. அ. மு. பரமசிவானந்தம்

1222010-11பேரா. அ. கிருட்டிணமூர்த்தி

1232010-11எசு. எம். கமால்

1242010-11ப. இராமசாமி

1252010-11பேரா. இர. சீனிவாசன்

1262010-11வ. சு. செங்கல்வராய பிள்ளை

1272010-11கவிஞர் வெள்ளியங்காட்டான்

1282010-11நெ. து. சுந்தரவடிவேலு

1292010-11முனைவர் சி. பாலசுப்பிரமணியன்

1302010-11மயிலை சிவமுத்து

1312010-11காழி சிவகண்ணுசாமி பிள்ளை

1322010-11கே. பி. நீலமணி

1332010-11கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன்

1342010-11அ. திருமலைமுத்துசுவாமி

1352010-11எசு. நவராசு செல்லையா

1362010-11பொ. திருகூடசுந்தரம்

1372010-11பேரா. சுந்தர சண்முகனார்

1382010-11தஞ்சை இராமையாதாசு

1392010-11கவிஞர் தாராபாரதி

1402010-11அருதனக்குட்டி அடிகளார்

1412010-11சரோசா இராமமூர்த்தி

1422010-11அ. சீனிவாசன்