Friday, 15 August 2014

சர்வ சத்துள்ள கொய்யா பழம்…




பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும்,தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை,பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள்
கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும்,குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால்,அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப்
போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.
கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும்
பலப்படும்.

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து
இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல்
வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட
நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து
தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட
பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை
சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை
சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு
மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி
உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சல்லவா!

ஓசைகளுக்கும் ஒலிகளுக்கும் ஒரு தளம்





பிரசன்டேஷன் பைல் ஒன்று தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பிட்ட ஓர் இடத்தில், நீங்கள் விரும்பும் ஒலி அல்லது ஓசை ஒன்றைத் தர விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்?
நான் ஒருமுறை சிறுவர்களுக்கான பிரசன்டேஷன் பைலில் கண்டாமணி சத்தம் (Gong)கொடுத்தால் நன்றாக இருக்கும் என எண்ணி, குறிப்பிட்ட அந்த ஓசைக்கான பைல் எங்கு கிடைக்கும் என்று தேடினேன்.

இத்தகைய விருப்பங்களை நிறைவேற்றவே Soungle என்று ஒரு வெப்சைட் உள்ளது. காடு என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Jungle மற்றும் ஒலி என்பதற்கான சொல்Sound என இரண்டையும் சேர்த்து இந்த பெயரைத் தந்திருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்.
இந்த தளம் சென்று நான் விரும்பும் ஒலிக்காக Gong என்று டைப் செய்தேன். அந்த தளத்தில் 27 வகையான கண்டாமணி சத்தம் கிடைத்தது.

பக்கத்திலிருந்த ஒரு சிறுவன் கிளாரினட் ஒலி எப்படி இருக்கும் என்று காட்டுமாறு கூறினான். சந்தேகத்துடனேயே Clarinet என டைப் செய்து என்டர் அழுத்த 12 வகையான கிளாரினட் ஒலி கிடைத்தது. ஒற்றை ஒலி முதல் பல சேர்ந்தது வரையிலான ஒலித் தொகுப்பு வரை தரப்பட்டது.

இதனை எப்படி நாம் பயன்படுத்துவது? உங்களுக்குப் பிடித்த ஒலியைத் தேடிக் கண்டறிந்தவுடன், அந்த சாம்பிள் ஒலி அருகே டவுண்லோட் கிளிக் செய்தால், உங்கள் பிரவுசரின் அடிப்படையில் சேவ் அல்லது சேவ் அஸ் கிடைக்கும். பின் இந்த பைலை நீங்கள் விரும்பும் இடத்தில் பயன்படுத்தலாம்.

ஒரே வாத்தியத்தின் பல்வேறு ஒலிகளை (Notes) சேர்த்துப் பெற்றுப் பயன்படுத்துவதும் நன்றாக இருந்தது. இதிலிருந்து ஓசைக்கான பைலை எடுத்துப் பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, ஒருமுறை இந்த தளம் சென்று பார்த்துவிடுங்கள். 

இதற்கான முகவரி   http://www.soungle.com.

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்....




மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல்,  சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.


1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம். எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.


3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.


4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.


5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.


6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.


7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.


8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.


9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.


10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.


11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.


12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.


13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.


14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.


15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.


16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.