Saturday, 16 August 2014

எந்த Internet இணைப்பையும் Wi-fi மூலமாக கணினி மற்றும் மொபைல்களிலும் பயன்படுத்த...




கணிணியில் INTERNET இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணிணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணிணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர். இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் பல கணிணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.
                                                     wifi hotspot

Connectify என்ற இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் வயர்கள் அல்லது கேபிள்கள் இல்லாமல் பல கணிணிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம். இதற்கு உங்கள் கணிணியில் windows net frame work 3.5 நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணிணியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். லேப்டாப்பில் வயர்லெஸ் சேவை இணைந்தே தான் வருகிறது. டெஸ்க்டாப் என்றால் வயர்லெஸ் ரூட்டர் தனியாக போட்டிருக்க வேண்டும்.


இந்த மென்பொருள் என்ன செய்கிறது ?

இந்த மென்பொருள் உங்களிடமுள்ள இணைய இணைப்பை வயர்லெஸ் சேவை மூலம் அதனை ஒரு வயர்லெஸ் ரூட்டராக மாற்றுகிறது. இதன் மூலம் மொபைல், பிராண்ட்பேண்ட், 3G, Wi-fi போன்ற எந்த இணைய இணைப்பையும் பகிருமாறு செய்ய முடியும். உங்கள் கணிணியை மற்ற கணிணிகள் அணுகுமாறு Wi-fi Hotspot ஐப் போல மாற்றுகிறது.


                       





இதனால் வயர்லெஸ் சேவை உள்ள எந்தவொரு கருவிகளும் ( Mobile, PC, Laptop, Tablet pcs, Android devices ) உங்களின் இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு WPA-PSK முறையிலான கடவுச்சொல் வைத்துக் கொள்ள முடியும். பாதுகாப்பான கடவுச்சொல்லை கொடுத்தால் மட்டுமே இணைப்பைப் பெற முடியும்.

எப்படிப் பயன்படுத்துவது?

1.கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.


2. நிறுவியதும் உங்கள் கணிணியின் டாஸ்க் பாரில் வலதுபுறத்தில் மென்பொருள் ஐகானாக தோன்றும். அதை கிளிக் செய்தால் அதன் மெயின் விண்டோ திறக்கப்படும்.

3. Wi-fi Name – உங்கள் வயர்லெஸ் இணைப்பிற்கான பெயரைக் கொடுக்கவும். மற்ற கணிணிகளில் அல்லது கருவிகளில் இந்த பெயர் தான் தெரியும்.

4. Password – மற்ற கணிணிகள் உங்கள் இணையத்தை அணுக பாதுகாப்பான கடவுச்சொல்லைக் கொடுக்கவும். குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும்.

5. Internet – இதில் எந்த இணைய இணைப்பைப் பகிரப் போகிறிர்களோ அதைத் தேர்வு செய்யவும். (எ.கா) Local Area Connection, Airtel

6. Wi-Fi – இதில் உங்கள் கணிணியின் வயர்லெஸ் அடாப்டரைத் தேர்வு செய்யவும். (எ.கா) Wireless Area Connection 1

                                             

7. பின்னர் Start Hotspot என்பதைக் கிளிக் செய்தால் போதும். இந்த மென்பொருளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும்.

இதில் எத்தனை பேர் நமது இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை
Connected Clients இல் பார்க்க முடியும்.

இதில் ஏற்கனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிரமுடியும். இந்த மென்பொருளை வீட்டில் , கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். மேலும் இதைக் கொண்டு வணிகரீதியாக ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு பணம் என்று தீர்மானித்து பயனர்களுக்கு இணையத்தை அனுபவிக்க வழிசெய்யலாம்.

இறுதியாக இந்த மென்பொருள் இலவசமானது. அற்புதமானது.

தரவிறக்கச்சுட்டி : Download Connectify

சமையல் அறையை நவீனமாக்கலாம்…




வீட்டில் இல்லத்தரசிகளின் பிரதான பகுதியாக விளங்குவது சமையல் அறைகளே. கட்டுமானத்துறையில் பல வகையான தொழில்நுட்ப முறைகள் புகுந்து விட்டாலும்  துரித கதியில் வேலையை முடிக்கும் வகையில் கட்டுமானங்கள் அமைத்துவிடுகின்றன. சில சமயங்களில் வரைமுறை இல்லாமல் இருக்கும் இடத்தில் அறைகள்  கட்டப்பட்டு விடுகின்றன. இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் அறைகளில் ஒன்றாக அமைந்து விடுகிறது சமையல் அறை.

பெரும்பாலானோர் வீட்டின் கடைசி அறையாகத்தான் சமையல் அறையை அமைப்பதால் அதன் பரப்பளவு சுருங்கி போய் விடுகிறது. இதனால் இல்லத்தரசிகள்  எதிர்பார்க்கும் வசதிகளை ஏற்படுத்த முடியாத நிலையும் உருவாகி விடுகிறது. வசதிகேற்ப வரவேற்பறை மற்றும் படுக்கையறைகள் நவீனமாக்கப்பட்டாலும் சமையல்  அறைகளை பழைய நிலையிலே பெரும்பாலானோர்கள் வீடுகளில் காட்சி அளிக்கும். சமையல் அறைகளை எளிமையான வழிமுறைகளை கையாண்டு நவீனப்     படுத்தலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
* சமையல் அறையின் சுவர் பகுதிகளில் படிந்திருக்கும் எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளை நீக்கும் வகையில் பெயிண்டுகளை சுரண்டி சுத்தம் செய்ய வேண்டும்.
* சமையல் அறையில் வெளிப்படும் வெப்பத்தை வெளியேற்றும் ‘வென்டிலேசன் பேன்களை’ கட்டாயமாக பொருத்தவேண்டும். இவை சமையல் அறையில் பரவி இருக்கும் வெப்பத்தை வெளியேற்றி அறையில் மிதமான வெப்பநிலையை தக்கவைக்க வழிவகை புரியும். மேலும் சமைக்கும்போது வெளிப்படும் நெடிகளை வெளியேற்றி  விடும். இல்லையெனில் நெடிகள் சமையல் அறையையும் அதன் அருகில் உள்ள அறைகளிலும் சூழ்ந்து கொண்டிருக்கும். இது வீட்டில் இருப்பவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிப்பதாக அமையும்.
* சமையல் அறையில் இணைக்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய் இணைப்புகளை சரி பார்த்துவிட்டு வடிவமைப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றை  இணைத்துக் கொள்ள வேண்டும்.
* இரவு மற்றும் பகல் நேரங்களில் சமைப்பதற்கு வசதியாக விளக்குகளை பொருத்த வேண்டும். சமையல் அறைகளில் பளிச்சென்று எரியும் விளக்குகளை விட கலைநயத்துடன் எரியும் மஞ்சள் நிற விளக்குகளை பொருத்துவது மிகவும் பிரம்மாண்டமான சூழலை உருவாக்கும். விளக்குகளை அனைத்து இடங்களிலும்  ஒளிரவிடும்படி செய்யாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒளிரவிட வேண்டும். அப்படி செய்தால் அறையும் நவீன மாற்றத்தை வெளிக்காட்டும்.
* சமையல் அறையின் கபோர்ட்டு மற்றும் ரேக்குகளின் வெளிபுற கதவுகளை அப்படியே விட்டுவிடாமல் அதில் ஏதேனும் டிசைன்களை வரைவது சமையல் அறைக்கு அலங்கார காரணியாக அமையும்.
* அறையின் அழகியலை வெளிப்படுத்துபவை வண்ணங்கள். சமையலறைக்கு பயன்படுத்தும் வண்ணங்கள் சற்று அடர் நிறமாக இருப்பது அறையின் மதிப்பை உயர்த்துவதாக அமையும்.
* சமையல் மேடையில் அடுப்புகளை வெளிப்புறமாக வைக்காமல் மேடையில் நடுவே சிறு பள்ளமாக அமைத்து அதனுள் பதியும் படி வைப்பது மேடைக்கான அழகினை அதிகரிக்கும். இதனால் மேடையின் மீது பாத்திரங்கள் இருப்பது போன்று தெரியும்.
* சமையல் அறையில் இடம் பெறும் பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற சாதனங்களை தினசரி பயன்படுத்தி விட்டு அதனை துடைத்து சுத்தமாக பராமரித்து  வரவேண்டும்.
* விருந்தினர்களாக வருபவர்கள் சமையல் அறைக்குள் நுழைந்தால் பொருட்களை எப்படி வைத்திருக்கிறோம் என்று தான் முதலில் பார்ப்பார்கள். அதனால் பொருட்களை வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். பொருட்களை பயன்படுத்திய பின் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். முக்கியமாக சமைத்த பின்பு உடனே பாத்திரங்களை சுத்தம் செய்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் பாத்திரங்கள் சமையல் மேடையில் குவிந்து கிடக்காது. அதனாலும் அறையின் அழகு மேம்படும்.
* பிரிட்ஜை கவனமாக பராமரித்துவர வேண்டும். அதில் இருந்து துர்நாற்றம் வீசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பிரிட்ஜினுள் இருக்கும் பொருட்கள் ஒன்றில் துர்நாற்றம் வீசினாலும் பிரிட்ஜ் முழுவதும் பரவி விடும். அதனால் அழுகும் நிலையில் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தி விட வேண்டும்.

இணையத்தில் அனைத்து பாடல்களையும் கேட்க




ஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள் . இதுப்போன்றவர்கள் இணையத்தை நாடுவதே பாடலை கேட்கத்தான். இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்க வேண்டும் .இல்லையெனில் பதிவிறக்கம் செய்து பாடலை கேட்க வேண்டும் .ஒரு சில பாடல்களை இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது.

என்ன செய்வது என்று கடைசியில் கூகுளை தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறிர்களா இதோ அதற்க்கான ஒரு மென்பொருள்.


                                 



                                 இதை பதிவிறக்க : வின்க்ரூவெஸ்



                       


இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு , இந்த மென் ஒருங்கினை திறக்கவும் .

வேண்டுமெனில் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளவும் .பின் SEARCH FOR MUSIC என்ற செக்பாக்சில் வேண்டிய குறிச்சொல்லை இட்டு பாடலை தேடிப்பெறலாம் .

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையங்கள்...



இணையம் தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்தில் இன்றைய குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன.
1. Kidsmart: லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விடயங்களை கற்றுத்தருகிறது. அரட்டை, சமூக இணைய தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விடயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.
2. Yahoo Kids: குழந்தைகளுக்காக யாஹூ நடத்தும் வலைத்தளம். விளையாட்டுக்கள், படங்கள், நகைச்சுவைகள், பொது அறிவு செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்காகவும் ஒரு பகுதி இருக்கின்றது.
3. Ask Kids: முன்னணி தேடுபொறிகளில் ஒன்றான Ask.com தளத்தின் குழந்தைகளுக்கான தேடுபொறியாகும்.
4. National Geographic Kids: அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society (National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்).
குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விடயங்களை குழந்தைகள் கற்றுக் கொள்ளலாம்.
5. Kids Health: மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.

பிறர் அறியா இன்டர்நெட் பிரவுசிங் வழி...



தற்போது அதிக புழக்கத்தில் உள்ள பிரவுசர்கள் அனைத்திலும், நம் இணைய உலாவினை மற்றவர்களிடமிருந்து மறைக்கும் வழிகளைக் கொண்டுள்ளன. ஆனால் இதனைப் பலரும் பயன்படுத்துவதில்லை. ஒரு சிலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை பிறர் அறியா (incognito mode) அல்லது தனி நபர் நிலை (Private) என அழைக்கின்றனர். சிலர் இதனை பாலியல்நிலை (Porn mode) எனவும் அழைக்கின்றனர். ஏனென்றால், இணையத்தில் உள்ள பாலியல் சார்ந்த தளங்களைக் காண்கையில், தங்களின் தேடலை மறைத்துக் கொள்வதற்காக, இந்நிலையினைப்பயன்படுத்துவதால், இந்த பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.

                                         


ஆனால், இவ்வாறு அழைப்பது தவறான ஒன்றாகும். ஒரு சிலர் அவ்வாறு பயன்படுத்தினர் என்றாலும், பலர் இந்த நிலை தரும் உயரிய பயன்களுக்காகவே பயன்படுத்தி வருகின்றனர். அதனால், இதனை அனைவரும் சில வேளைகளில் பயன்படுத்த வேண்டும் என்றே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நிலைகளை இங்கு பார்க்கலாம். 

தனிநபர் நிலை (Private mode) என்பது என்ன?

இந்த நிலைகளில் நீங்கள் இணையத்தில் உலா வருகையில், நீங்கள் பார்க்கும் தளங்கள் எவை எவை என மற்றவர் அறிந்து கொள்ள இயலாது. கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறிய இயலாதே ஒழிய, உங்களுக்கு இணைய இணைப்பினை வழங்கும் இணைய சேவை நிறுவனங்கள் (Internet Service Providers) மற்றும் ஆன்லைன் மையங்கள் அறிந்து கொள்ளலாம். அவர்களும் அறியக் கூடாது என நீங்கள் விரும்பினால், நீங்கள் உங்களுக்கென சொந்தமான தனி நெட்வொர்க்கினை (Virtual private network (VPN).) அமைத்துக் கொள்ள வேண்டியதுதான். 

இந்த தனிநபர் அல்லது பிறர் அறியா நிலையில், நீங்கள் பிரவுஸ் செய்திடுகையில், உங்களுடைய தேடல் மற்றும் இணைய தளத் தேடல் கள் குறித்து குறிப்புகள் அழிக்கப்படுகின்றன. பதியப்படுவதில்லை. ஹிஸ்டரி ஏற்படுத்தப்படுவதில்லை. இந்த நிலையை எப்படி மேற்கொள்வது என, சார்ந்த தளங்களிலேயே தெரிந்து கொள்ளலாம். இதனை நமக்கு அதிகப் பயன் தரும் வகையில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

கட்டணம் கேட்கும் தளங்களில்: பல இணைய தளங்கள், தங்களின் தளங்களில் உள்ள தகவல் கட்டுரைகளைப் படிக்க அனுமதிக்கும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்திட அனுமதிக்கும். குறிப்பிட்ட அளவினைத் தாண்டியவுடன், கட்டணம் செலுத்துமாறு கேட்கும். நீங்கள், முதலில் இந்த தளம் சென்று பயன்படுத்துகையில், பிறர் அறியா தனி நபர் நிலையில் பயன்படுத்தினால், சிறிது காலத்திற்குப் பின்னர், கட்டணம் கேட்கப்படும் பிரச்னை எழாது. ஏனென்றால், உங்களைப் பற்றிய தகவல் கொண்டுள்ள குக்கி பைல்கள் பதியப்பட மாட்டாது என்பதால், அதன் அடிப்படையில் கட்டணம் செலுத்துமாறு, குறிப்பிட்ட இணைய தளத்தால் கேட்க இயலாது. உங்களை அடையாளம் காட்டும் குறிப்புகள் அடங்கிய குக்கி பைல்கள் இல்லாததால், ஒவ்வொரு முறை நீங்கள் இந்த இணைய தளத்திற்குச் செல்கையில், நீங்கள் முதல் முறை வரும் புதிய நபராகவே பார்க்கப்படுவீர்கள்.
இத்தகைய தளங்களில் சில, நீங்கள் குறிப்பிட்ட தளப் பக்கத்தினை, பேஸ்புக் அல்லது ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் அணுகினால், தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கும். கட்டணம் கேட்காது.

பொது இணைய மையங்கள்: ஸ்மார்ட்போன், டேப்ளட் பி.சி.க்கள், புதிய சிறிய லேப்டாப் கம்ப்யூட்டர்கள் அதிகம் புழக்கத்தில் இருப்பதால், நாம் இணைய மையங்களுக்கு அவ்வளவாகச் செல்வதில்லை. அல்லது பொது நூலகங்கள் சென்று, அங்குள்ள இணைய இணைப்பினைப் பயன்படுத்துவதில்லை. ஆனாலும், சில வேளைகளில் நாம் பொதுவான மையங்களுக்குச் செல்கிறோம். இங்கு இணைய தளங்களுக்குச் சென்று, உங்களுக்குத் தேவையான தளங்களைப் பார்வையிடுகையில், அதற்கான, ஏற்கனவே பதிந்து வைத்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்துப் பயன்படுத்துவீர்கள். இவை பதியப்படுவதால், அடுத்து வருபவர்களும், இவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் உருவாகும். எனவே, மற்றவர்கள் கண்களில் இருந்து தப்பிக்க, இத்தகைய பொது இணைய மையங்களில், பிறர் அறியா, தனி நபர் நிலையைப் பயன்படுத்தலாம். இந்த நிலை உங்கள் தனி நபர் தகவல்களுக்கு நல்லதொரு பாதுகாப்பினைத் தரும்.

ஹிஸ்டரி வேண்டாமே!: நாம் செல்லும் இணைய தளங்கள் குறித்த ஹிஸ்டரி பதிவுகளை ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது. மோசமான தளங்களைப் பார்க்க மட்டுமின்றி, வேறு சிலவற்றிற்கும் இந்த பாதுகாப்பான நிலை பயன்படும். தீவிரமான உடல் கொல்லி நோய் குறித்து உங்களுக்குத் தகவல்கள் தேவை. இந்த நோய், உங்களையோ அல்லது வேண்டியவர்களையோ பாதித்திருக் கலாம். எனவே, இணைய தளங்களைத் தேடுகையில், இவற்றிற்கான முகவரிகள் மற்றும் தேடல் சொற்கள் பதியப்படுவதால், அவற்றை நீங்கள் தேடினீர்கள் என்பது, மற்றவர்கள் இணையத் தேடுதலை மேற்கொள்கையில் காட்டப்படலாம். அல்லது, மற்றவர்களுக்கு திடீரென சந்தோஷ அதிர்ச்சியை ஏற்படுத்த, பரிசு ஒன்று கொடுப்பதற்கு, இணைய தளத்தினைப் பயன்படுத்தலாம். இதனை உங்கள் குடும்ப நபர்களே அறியக் கூடாது என நீங்கள் விரும்பலாம். அத்தகைய சூழ்நிலைகளில், இந்த பிறர் அறியா, தனிநபர் நிலையை மேற்கொள்ளலாம். தேவைப்படும் போது இவற்றைப் பயன்படுத்துவதே சிறந்தது.

போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண்டுமா?




பொதுவாக நாம் நமது தொலைபேசிகளிலே எழுத்துக்கள் மற்றும் இலக்கங்களைப் பயன்படுத்தி சிறிய உருவங்களை வரைந்து நண்பர்களுக்காக அனுப்புவதுண்டு.ஆனால் உங்கள் புகைப்படங்களை; அவ்வாறு எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தி வரைந்தால் எவ்வாறு இருக்குமென எண்ணுகின்றீர்களா?அவ்வாறாயின், குறியீடுகள் மூலம் உங்கள் புகைப்படங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்ற எண்ணத்திற்கு தீர்வாக ஒரு தளம் உள்ளது.



இங்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான படங்களை தரவேற்றியபின் விரும்பிய குறியீடுகளை கொடுத்தால் அது அக் குறியீடுகளைப் பயன்படுத்தி படம் வரைந்து தரும்.

விரும்பின் நீங்கள் அப் படத்தை சேமித்தும் கொள்ளலாம். சேமிக்கும்போது அது “.txt” வடிவிலேயே சேமிக்கப்படும். அதாவது Notepad இல். விரும்பின் சேமித்த படத்தில்கூட நீங்கள் மாற்றம் செய்து ரசிக்கலாம்.

மென்பொருள் இல்லாமல் கைத்தொலைபேசியில் Folder ஐ மறைக்க





உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள சில படங்கள் அல்லது வேறு ஏதும் ஆவணங்கள் போன்றவற்றை தேவையில்லாதவர்கள் பார்ப்பதை தடுக்கவேண்டுமென எண்ணுகின்றீர்களா?

உலகில் எங்கிருந்தும் நமது பிரிண்டரில் தகவல்களை அச்சிட



நமது கணிணியில் தகவல்களை அச்சிட கணிணியில் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டரைப் பயன்படுத்துவோம். நாம் வெளியில் எங்கேயாவது செல்லும் போது நண்பரின் கணிணியில் அல்லது இணைய மையங்களில் இணையத்தில் உலவும் போது எதாவது ஒரு முக்கியமான தகவலைப் படிக்கிறிர்கள். அதனை அச்சிட்டு எடுத்துக் கொண்டால் பயன்படும் என்று நினைப்பீர்கள். அங்கே பிரிண்டர் இருந்தால் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால் அந்த தகவலை நீங்கள் மறந்து போகலாம்.
இதற்கென கூகிள் நிறுவனம் ஒரு அற்புதமான சேவையை அறிமுகப் படுத்தியிருக்கிறது. இதன் பெயர் Google Cloud Print. முதலில் கிளவுட் அல்லது மேகக்கணிணி என்பது எந்தவொரு கணிணிப் பயன்பாட்டையும் இணையம் மூலம் பயன்படுத்துவது எனப்படும். நமது கோப்புகளை இணையத்தில் சேமித்துக் கொள்வது ஒரு கிளவுட் பயன்பாடாகும்.

இந்த வரிசையில் உங்கள் வீட்டில் இருக்கும் பிரிண்டரை ஒருமுறை இணையத்தில் இதற்கென இணைத்துவிட்டால் போதும். பின்னர் உலகில் எங்கிருந்தும் தகவல்களை நமது பிரிண்டருக்கு அனுப்பிவிடலாம். பிரிண்டர் மின்சார இணைப்பில் இருப்பின் அப்போதே அச்சிடப்பட்டு விடும். இல்லாவிட்டால் எப்போது ஆன் செய்கிறோமோ அப்போது அந்த தகவல்கள் அச்சிடப்படும். இந்தப் பயன்பாடு முதலில் ஆண்டிராய்டு மொபைல் பயன்பாடாக மட்டுமெ கொடுக்கப்பட்டது. இப்போது கூகிளின் குரோம் நீட்சியாக வழங்கப்படுகிறது. நீங்கள் மொபைலில் இருந்து கூட அச்சிட தகவலை அனுப்பலாம். இதில் doc, pdf, txt போன்ற பெயர்களில் முடியும் இணையமுகவரியைக் கொண்ட கோப்புகளை மட்டுமே அச்சிட முடியும்.
நமது பிரிண்டரை எப்படி Google Cloud Print இல் இணைப்பது?
1. குரோம் உலவியில் உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து கொள்ளவும். கீழே உள்ள சுட்டியில் சென்று உங்களிடம் இருக்கும் பிரிண்டரைத் தேர்வு செய்து இணைத்துக் கொள்ளவும். http://www.google.com/landing/cloudprint/win-enable.html
2. கீழே உள்ள சுட்டியில் சென்று குரோம் கிளவுட் பிரிண்ட் நீட்சியை Install என்பதைக் கிளிக் செய்து நிறுவிக் கொள்ளவும்.
https://chrome.google.com/extensions/detail/ffaifmgpcdjedlffbhenaloimajbdkfg?hl=en
3. பின்னர் இணையத்தில் நீங்கள் எதாவது ஆவணங்களைப் பார்க்கும் போது குரோம் உலவியின் மேல் வலது புறம் பிரிண்டர் குறும்படம் (Printer Icon) இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் அந்த ஆவணம் அச்சிட அனுப்பப் படும்.
நீங்கள் எத்தனை பிரிண்டரை வேண்டுமானாலும் இந்த சேவையில் இணைத்துக் கொள்ளலாம். பிரிண்டர்களை நிர்வாகம் செய்ய, தகவல்களை கேன்சல் செய்ய குரோம் உலவியின் Settings -> Options -> Under the Hood -> Google cloud Print என்பதில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

விண்டோஸ் XP தெரிந்ததும்... தெரியாததும்...




 

(windows xp) தரும் வசதிகள் ஏராளம். ஆனால் அத்தனையும் அனைவராலும் பயன்படுத்தப்படுவதில்லை. பலர் தெரிந்து கொண்டிருப்பதும் இல்லை. எனவே அத்தகைய பயன்பாடுகளில் குறிப்பிட்ட சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறோம்.




1. டாஸ்க்பாரிலிருந்தே மை கம்ப்யூட்டர்ஸ்: பல புரோகிராம்களை இயக்கும் போது புரோகிராம்களின் டேப்கள் டாஸ்க் பாரில் அமர்ந்திருக்கும். அதனைக் கிளிக் செய்து நாம் புரோகிராம்களை இயக்கி பைல்களைக் கையாளலாம். அதே போல மை கம்ப்யூட்டர் போல்டரில் உள்ள அனைத்து துணை போல்டர்களையும் அவற்றின் பைல்களையும் டாஸ்க் பாரில் இருந்தவாறே கையாளலாம். அதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் அல்லது மை கம்ப்யூட்டர் ஐகானை அழுத்துவது மூலம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸின் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். மெனு ஒன்று விரிந்து மேலே வரும்.






அதில் டூல் பார் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் வரும் பிரிவுகளில் நியூ டூல் பார் என ஒன்று தென்படும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது சிறிய நியூ டூல்பார் என்னும் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் மை டாகுமெண்ட்ஸ் போல்டருக்குச் சென்று அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி டாஸ்க் பாரில் வலது ஓரத்தில் மை டாகுமெண்ட்ஸ் போல்டர் சதுரம் இருக்கும். அதில் உள்ள பைல்களைக் கையாள நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் செல்ல வேண்டியதில்லை. இதனைக் கிளிக் செய்தாலே போதும். மொத்த பைல் மெனுவும் கிடைக்கும். இந்த வழியினை விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்திலும் மேற் கொள்ளலாம். விஸ்டாவில் மை டாகுமெண்ட்ஸ் என்பது டாகுமெண்ட்ஸ் என இருக்கும்.




கிராஷ் ஆகும்போது போல்டர்களைக் காப்பாற்ற: விண்டோஸ் எக்ஸ்பியில் பல போல்டர்களைத் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில் ஏதாவது ஒரு போல்டர் கிராஷ் ஆனாலும் அனைத்தும் கிராஷ் ஆகி மூடப்படும். அதில் சேவ் செய்யப்படாத டேட்டா மற்றும் பைல்களின் கதி அவ்வளவுதான். மற்ற போல்டர்களுக்கு இந்த நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு சிஸ்டத்தில் செட் செய்திடலாம். இது ஒரு மறைக்கப்பட்ட ஆப்ஷனாகத் தரப்பட்டுள்ளது. இதற்கு Control Panel ஐத் திறக்கவும்.





அதில் Folder Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் வியூ டேப் சென்று வரிசையாகக் கிடைக்கும் ஆப்ஷன்ஸ்களை ஸ்குரோல் செய்திடவும். இதில் ‘Launch folder windows in a separate process’ என்பதில் உங்கள் தேடலை நிறுத்தவும். இதில் அடுத்ததாக உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி எப்போதாவது கிராஷ் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட போல்டர் தவிர மற்றவை காப்பாற்றப்படும்.




ஸ்டார்ட் மெனுவில் கூடுதல் புரோகிராம்கள்: ஸ்டார்ட் மெனுவில் புரோகிராம்களுக்கான ஷார்ட் கட்கள் உள்ளன. இவற்றைக் கிளிக் செய்தால் அந்த புரோகிராம்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இவற்றை எண்ணிப் பாருங்கள். ஆறுதான் இருக்கும். அப்படியானால் கூடுதலாக புரோகிராம்களுக்கான சுருக்கு வழிகளை இந்தப் பட்டியலில் அமைக்க வேண்டும் என்றால் என்ன செய்திட வேண் டும். ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்திடுங் கள். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் கிளிக் செய்து இன் னொரு விண்டோவினைப் பெறுங்கள். இந்த விண்டோவில் கஸ்டமைஸ் பட்டனை அழுத்தவும். புதியதாகத் திறக்கப்படும் டயலாக் பாக்ஸ் நடுவே உள்ள புரோகிராம் செக்ஷனில் Number of Programs in the Start menu என்று இருப்பதனைக் காணலாம்.இதில் அருகே 6 என்று இருக்கும். இதன் மேல் கீழ் அம்புக் குறிகளை அழுத்தி புரோகிராம்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தலாம் அல்லது குறைக்கலாம். இந்த எண்ணை செட் செய்தபின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த எண்ணிக்கைக்கேற்ப ஸ்டார்ட் மெனுவில் ஷார்ட் கட்கள் அமைக்கப்படும்.




தனி ஆளுக்கு ஏன் பாஸ்வேர்ட்: நீங்கள் ஒருவர் மட்டுமே உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அல்லது உங்களுக்கு நம்பிக்கையான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு ஏன் பாஸ்வேர்ட் கொடுத்து கம்ப்யூட்டருக்குள் நுழைய வேண்டும். தேவையில்லையே! எனவே பாஸ்வேர்ட் விண்டோ இல்லாமல் நுழைந்திட Start கிளிக் செய்து Run விண்டோவிற்குச் செல்லவும். அதில் control userpasswords என டைப் செய்திடவும். என்டர் செய்து கிடைக்கும் விண்டோவில் உங்களுடைய அக்கவுண்ட்டைத் தேர்ந்தெடுத்து பின் ‘Users must enter a user name and password to use this computer’ என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். ஓகே கிளிக் செய்திடவும். பின் பழைய பாஸ் வேர்டையே கொடுத்து பின் மீண்டும் ஓகே கிளிக் செய்தால் அடுத்த முறை பாஸ்வேர்ட் கொடுக்காமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம்.




டெஸ்க் டாப்பைப் பெற: பல புரோகிராம்களை இயக்கிக் கொண்டிருக்கையில் டெக்ஸ்க் டாப்பில் உள்ள இன்னொரு புரோகிராமினை இயக்க டெஸ்க் டாப் திறக்கப்பட வேண்டும் என விரும்புவோம். அதற்கு பல வழிகள் உள்ளன. டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் ‘Show the Desktop’’ என்று இருப்பதைக் கிளிக் செய்திட வேண்டும். உடனே டெஸ்க் டாப் திரை கிடைக்கும். மீண்டும் இயங்கிக் கொண்டிருந்த புரோகிராம் வேண்டும் என்றால் அதே போல கிளிக் செய்து Show Open Windows என்று இருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதே செயலை கண்ட்ரோல் +டி அழுத்தியும் கண்ட்ரோல்+எம் அழுத்தியும் மேற்கொள்ளலாம்.




டாஸ்க் பாரில் குரூப் பைல்ஸ்: அடுத்தடுத்து பல பைல்களைத் திறந்து இயக்குகையில் அவற்றின் பெயர்களுடன் கூடிய பட்டன்கள் டாஸ்க் பாரில் இடம் பெறும். புரோகிராம்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது டாஸ்க் பாரில் இட நெருக்கடி ஏற்படும். இதனைத் தவிர்க்க இந்த புரோகிராம்களை குரூப் செய்திடலாம்.




அதாவது வேர்டில் மூன்றுபைல்கள் திறக்கப்பட்டால் அவற்றை ஒரே பட்டனில் அமையுமாறு செய்திடலாம். பட்டனில் பைல்களின் எண்ணிக்கையுடன் புரோகிராம் பெயர் தெரியும். இதற்கு சிஸ்டம் செய்திட வேண்டிய முறை. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். விரியும் மெனுவில் புராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும். ‘Group Similar Taskbar buttons’ என்று லேபில் உள்ளதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.




பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல தளங்களைத் திறந்தால் அவை அனைத்தும் ஒரே பட்டன்கீழ் இருக்கும். அதில் மவுஸை வைத்து கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் இருந்து உங்களுக்கு வேண்டிய தளத்தைத் தேர்ந்தெடுத்துப் பெறலாம். அதே போல் வேர்டில் பல பைல்களைத் திறந்து செயல்பட்டால் அவை அனைத்தும் டாஸ்க் பாரில் பட்டியலிடப்படும். பட்டனில் கிளிக் செய்து தேவையான பைலையும் தேர்ந்தெடுத்து இயக்கலாம்.




டாஸ்க் பாரில் வெப்சைட் பிரவுசிங் : இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து ஒரு குறிப்பிட்ட முகவரி உள்ள தளத்தைப் பெற வேண்டும் என்றால் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து பின் லோகேஷன் அல்லது அட்ரஸ் பாரில் தள முகவரியை டைப் செய்கிறோம். இந்த சுற்று வழிக்குப் பதிலாக டாஸ்க் பாரிலேயே அந்த தளத்தின் முகவரியை டைப் செய்து பெறும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த வழியை டாஸ்க்பாரில் ஏற்படுத்தலாம். டாஸ்க் பாரில் உள்ள காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். விரியும் மெனுவில் ‘Lock the Taskbar’ என்பதில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்துவிடவும். பின் கிடைக்கும் கட்டத்தில் டூல்பார்ஸ் என்பதில் மவுஸின் கர்சரை அமைத்தால் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால் அதன் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தப்படும்.





கீழே டாஸ்க்பாரில் கடிகார நேரத்திற்குப் பக்கத்தில் அட்ரஸ் என்று இருக்கும். இதனைக் கிளிக் செய்து மவுஸால் இழுத்தால் ஒரு அட்ரஸ் பார் விரியும். இதில் நீங்கள் காண வேண்டிய வெப் சைட்டின் அட்ரஸை டைப் செய்தால் உடனடியாக அந்த தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அட்ரஸை டைப் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் டைப் செய்தால் ஏற்கனவே பார்த்த இணைய தளங்களின் முகவரிகள் தாமாகவே எழுந்து வரும்; அதில் கிளிக் செய்து வேலையை முடிக்கலாம் என்று சொல்கிறீர்களா? அதே மாதிரி இங்கும் நீங்கள் டைப் செய்கையில் தளத்தின் பெயரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பயன்படுத்தியிருந்தால் இங்கும் முழு முகவரியும் கிடைக்கும். அப்படியே அதன் மீது கிளிக் செய்திடலாம்.




ஒலி இல்லாத பிரவுசிங்




இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் சில தளங்களில் பின்னணி இசை மற்றும் வேறு வகையான எச்சரிக்கை ஒலிகள் வரும் வகையில் பைல்களைப் பதித்திருப்பார்கள். தளத்தைப் பார்க்கையில் இந்த ஒலிகள் ஒலிக்கப்பட்டு நம் கவனத்தைத் திருப்பும். அந்த தளம் மூடப்பட்டால் தான் ஒலி நிற்கும். எப்படி இந்த ஒலியை நிறுத்துவது. ஸ்பீக்கரை எடுத்துவிடலாமா? கம்ப்யூட்டரின் உள்ளேயே இணைந்த ஸ்பீக்கர் என்றால் என்ன செய்வது? நிறுத்துவதற்கும் ஒரு செட்டிங் உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளுங்கள். கூணிணிடூண் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Internet Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Advanced என்னும் டேப் பட்டன் மீது கிளிக் செய்திடவும். ஸ்குரோல் வீலை கீழாக இயக்கி Multimedia என்னும் பிரிவிற்குச் செல்லவும்.




இதில் Play sounds in webpages என்னும் பிரிவில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே பட்டன் அழுத்தி வெளியேறவும். இனி இணைய தளங்களைப் பார்வையிடுகையில் தளத்திலேயே உள்ள சவுண்ட் பைல்கள் இயங்கி தேவையற்ற ஒலியைக் கொடுக்காது. மீண்டும் ஒலி தேவை என எண்ணினால் மேலே சொன்ன வழிகளில் சென்று டிக் அடையாளம் நீக்கிய இடத்தில் மீண்டும் அதனை அமைக்கவும்.

Google பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்




இணையத்தில் ஏதாவது ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமாயின் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் Google தான். Google தேடுதளத்தின் ஊடாக எண்ணிடலங்காத தரவுகளை தாம்