Wednesday, 6 August 2014

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க....!

Drumstick Leaves for Hair Growth - Beauty Care and Tips in Tamil

தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.
முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

நாளை : மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

Android mobile மூலமாக கொசுவை விரட்ட புதிய மென்பொருள்


உலகம் மொத்தமும் ஸ்மார்ட் போனுக்குள் அடங்கிவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது.

                                       
தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று சிலர் புலம்புகிறார்கள். மேலும் அதில் இருந்து கிளம்பும் புகை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இந்த புகை சிலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது.

தற்போது அந்த பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள "Mosquito Repellent" என்ற அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும்.

கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால் கொசுக்கள் நமக்கு அருகில் கூட வராது. அதே போல் எம் டிராக்கர் என்ற அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு பூச்சி தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். கொசு விரட்டி வெளியிடும் சத்தம் நமக்கு இம்சையாக காதில் ஒலிக்காது. காதின் அருகே செல்போனை வைத்து கேட்டால் மட்டுமே ஒலி கேட்கும்.

கொசுக்களுக்கு காதுகள் இல்லை என்ற போதிலும், ஒலி அதிர்வை கொசுக்களால் கண்டுபிடிக்க முடியும். ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற பொது இடங்களிலும், வெளியிடங்களிலும் கொசு தொல்லை அதிகமாக இருந்தால், செல்போனை எடுங்கள், அப்ளிகேசன் சுவிட்சை ஆன் செய்யுங்கள். இது உண்மையிலேயே வேலை செய்கிறதா இல்லையா என்பதை பார்ப்பது பெரிய கஷ்டமில்லை. ஏனெனில் இதை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

download : here 

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?



வணக்கம் நண்பர்களே !!
     
                 நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?

                                                       

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ , உங்களுடைய DONGLEஇன் IMEIகொடுத்து CALCULATE கொடுக்கவும்.

இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.

அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.

சுவாரசியமான மூன்று கணினி விளையாட்டு


நாம் பெரும்பாலும் விளையாடும் கணினி விளையாட்டுகளின் memory-ன் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்,அத்தகைய விளையாட்டுகளை விளையாடும் போது நாம் கணினியில் மற்ற வேலைகள் ஏதும் செய்ய முடியாது. ஆனால் சில சமயங்களில் மிகச்சிறிய அளவுடைய விளையாட்டுகள் பெரிய விளையாட்டுகளை விட மிகவும் சுவாரசியமாக மட்டுமில்லாமல் நம் அறிவை வளர்ப்பதாகவும் அமைந்து விடும்.அதை போன்று சில flash games.

                                             



ஒரு இரவு பொழுதில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஓன்று ஆற்றை கடக்க முயற்சிக்கிறார்கள்.அவர்களிடம் ஒரே ஒரு விளக்கு மட்டும் உள்ளது.அதுவும் சரியாக 30 sec மட்டும் எரியும்,ஒரே சமயத்தில் இருவர் மட்டும் ஆற்றை கடக்க முடியும்,பின்னர் ஒருவர் திரும்பி வந்து மற்றொருவரை அழைத்து செல்ல வேண்டும்,அதில் ஒருவர் 1sec,பாலத்தை கடப்பார் மற்றவர்கள் முறையை 3sec,6sec,8sec,12sec,குள் பாலத்தை கடப்பார்கள். சரியாய் 30 sec-குள் அனைவரையும் ஆற்றை கடக்க வைக்க வேண்டும்.முயற்சித்து பாருங்கள்.



ஒரு குதிரை வீரன் ஒரு கோட்டையில் இருந்து மற்றொரு கோட்டைக்கு செல்ல முயற்சிக்கிறார் ஆனால் நடுவே ஒரு பிரச்சனை அவருக்கு காத்திருக்கிறது மொத்தம் 14 தூண்கள் கோட்டைகளுக்கு இடையே இருக்கிறது அதில் அந்த வீரர் chess board-ல் செல்லும் குதிரையை போன்று L shape-ல் செல்ல வேண்டும்.ஒரு முறை நின்ற தூணில் மறுமுறை வர முடியாது. அவர் அந்த தடையை கடக்க உதவுங்கள்.




ஒரு கட்டிடத்தில் உள்ள ஐந்து வெவ்வேறுlift-களில் ஐந்து பேர் மாட்டிகொண்டர்கள்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு floor-ல் இருக்கிறார்கள் ,இதில் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் அனைவரும் 21-க்கும் 25-க்கும் இடைப்பட்ட floor-களில் நின்றால் lift door தானாக திறந்து விடும்,நீங்கள் ஒரே சமயத்தில் இரண்டு lift களை மேலயோ அல்லது கீழையோ operate பண்ணலாம்.up buttonனை அழுத்தினால் 8 floor மேலை சென்று விடும் down button னை அழுத்தினால் 13 floor கீழே இறங்கி விடும், இதை பயன்படுத்தி ஐந்து பேரையும் lift ஐ விட்டு வெளிக்கொண்டு வரவேண்டும்.

WINDOWS கணினியை APPLE கணினியாக மாற்ற


நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம்(microsoft windows) கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.


                                                               

நாம் விண்டோவ்சின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம் இதற்க்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும் பின்னர் கணினியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான்.

இந்த மென்பொருள் நம் கணினியை அப்படியே ஆப்பிள் கணினி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.


                             இதனை பதிவிறக்க : MAC OSX LION


மேலே உள்ள சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள் இதனை நாம்சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணினியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.

இதனை பெருவதற்க்கு உங்கள் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZEஎன்பதை தேர்வு செய்யுங்கள் அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.


இப்படி இருக்கும் உங்கள் விண்டோ :


                       


இப்படி ஆகிவிடும் :


                       


இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அன்இன்ஸ்டால்(unistall)செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினி முதலில் இருந்தது போல மாறிவிடும்.

மின்னஞ்சல் முகவரிகளை சோதித்து பார்க்க இலவச மென்பொருள்


வீட்டு முகவரி இருக்கோ இல்லையோ ஆனால் மின்னஞ்சல் முகவரி இல்லாத இணைய பயணார்களே இல்லை என்று கூறும் அளவிற்கு மின்னஞ்சல் சேவையானது இன்று அனைவரிடமும் சென்றுவிட்டது.இதற்கு முக்கிய காரணம் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இலவசமாக மின்னஞ்சல் சேவையினை வழங்குவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

                                            
மேலும் மின்னஞ்சல் முகவரி இல்லையெனில் கணணி பயன்பாட்டாளர் என்பதற்கு அடையாளமே இல்லையென்ற நிலை உள்ளது. ஏன் நம்மில் பலர் பல்வேறு நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருவோம். இதற்கு காரணம் இலவசம் என்ற ஒன்றே ஆகும்.

ஒரு சில இணைய பயனார்கள் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துவார்கள். அவற்றில் ஒன்றை தன்னுடைய நண்பர்க்கு கொடுத்திருப்பார். ஆனால் அந்த முகவரியை பயன்படுத்தாமல் இருப்பார். இதனால் அந்த மின்னஞ்சல் முகவரி செயல் இழந்துவிடும்.

அந்த செயலிழந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால், சரியான முகவரி அல்ல என்ற செய்தியே வரும். இதுபோன்ற கோளாருச் செய்திகள் வருமேயானால் அந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியானது உபயோகத்தில் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.

இதற்கு ஒரே வழி குறிப்பிட்ட மின்னஞ்சலுடைய உரிமையாளரிடம் கேட்டால் மட்டுமே மின்னஞ்சல் முகவரி நடப்பில் இருக்கிறதா என்பது சாத்தியம் ஆகும். இதற்கு மற்றுமொரு வழி உள்ளது. சரியான மின்னஞ்சல் முகவரிதானா என்று சோதிக்க ஒரு மென்பொருள் உள்ளது. அந்த மென்பொருளின் வாயிலாக அறிய முடியும்.

இணையத்தில் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Import என்னும் ஓப்ஷனை தேர்வு செய்து மின்னஞ்சல் முகவரிகளை உள்ளினைத்துக் கொள்ளவும்.

நாம் txt, CSV, Excel, Access அல்லது Database கோப்புக்களை உள்ளினைத்து கொள்ள முடியும். கோப்புகளை இணைத்தப் பிறகு Check emails என்னும் பொத்தானை அழுத்தவும். பின் சில நொடிகளில் உங்களுக்கான முடிவு தெரிந்து விடும். சரியான முகவரி எவை எவை என்று, பின் தவறான முகவரியை நம்மால் எளிமையா முறையில் அறிந்து கொள்ள முடியும்.

இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இணைய வசதியுடன் எந்ததெந்த மின்னஞ்சல் முகவரிகள் போலியானவை என்று எளிமையான முறையில் கண்டறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருள் வசதியில் மூலமாக டொமைன் மின்னஞ்சல் முகவரிகள் சரியானவைதானா என்றும் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகும்.

Computer Games குறித்த இணைய தளங்கள்


கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது தவறில்லை.ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது முழு நேரத்தினையும் அதில்  செலவிடுவதுதான் மிகப் பெரிய தவறு.சிலர் இதற்கு அடிமையாகி விடுகின்றனர்.கேம்ஸ் விளையாடுவது ஒரு சிறந்த பொழுதுபோக்கு தான்.அது நம் தீர்க்க ரீதியான  சிந்தனையை,லாஜிக்காக முடிவெடுக்கும் திறனை வளர்க்கின்றன என்பதுவும் உண்மையே.
                                           

தற்போது மிக அழகான கிராபிக்ஸ் பின்னணியில் கேம்ஸ் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன.சிடி மற்றும் டிவிடியில் கேம்ஸ் பதியப்பட்டும் கிடைக்கிறது.இருப்பினும் பலர் இண்டர்நெட்டில் கட்டணம் செலுத்தியோ,இலவசமாகவோ கிடைக்கும் கேம்ஸ்களையே விரும்பி டவுண்லோட் செய்கின்றனர்.ஆன்லைனிலேயே கேம்ஸ் விளையாடும் வசதியும் நிறைய கிடைக்கிறது.முகம் தெரியாத எங்கோ இருக்கும் ஒருவருடன் இன்டர்நெட் வழியாக விளையாட விளையாட்டுகளைத் தரும் இணைய தளங்களும் உள்ளன.


கேம்ஸ் குறித்த இணைய தளங்கள் அதிக அளவில் இருந்தாலும் அதில் மிகவும் ஆர்வமூட்டும் விளையாட்டுகளைத் தரும் இணைய தளங்கள் நான்கு  உள்ளது.அவை

  1. Game Daily(www.gamedaily.com)
  2. GameSpot(www.gamespot.com)
  3. Game Fly(www.gamefly.com)
  4. Game Top(www.gametop.com)




Game Daily

இவற்றில் முதலில் குறிப்பிட்ட Game Daily என்ற தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒன்றரைக் கோடி பேர் கேம்ஸ் பெற வருகின்றனர்.விளையாட்டுகளை விளையாடத் தேவையான பலவிதமான கன்சோல்கள்,மெசின்கள் மற்றும் டவுண்லோட் செய்யக் கூடிய கேம்ஸ்,அவை குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் என கேம்ஸ் குறித்து அனைத்து தகவல்களும் கிடைக்கும் தளமாக இது உள்ளது.பல கேம்ஸ் இலவசமாக இங்கு கிடைத்தாலும் பல புதிய கேம்ஸ் பெற கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்.


கேம்ஸ்பாட் (GameSpot)


ஒரு கிராபிக்ஸ் நிறைந்த கேம்ஸ் தளமாகும்.பெர்சனல் கம்ப்யூட்டர்,எக்ஸ் பாக்ஸ் 360,வை,பி.எஸ்.3 என அனைத்து வகை பிரபலமான கேம்ஸ் சாதனங்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.அவ்வப்போது வெளியாகும் புதிய கேம்ஸ் பற்றி இங்கு கருத்துக் கட்டுரைகள் வெளியாகின்றன.இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ள கேம்ஸ் தருவதுடன் கட்டணம் செலுத்திப் பெறும் கேம்ஸ்களையும் இந்த தளம் கொண்டுள்ளது.



இந்த தளத்தில் இயங்கும் குழுவில் நீங்களும் இணைந்து கேம்ஸ் குறித்த உங்கள் கருத்துகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.இந்த தளத்தின் மேலாக உள்ள ஸ்போர்ட்ஸ் ஐகானில் கிளிக் செய்தால் நீங்கள் இன்னொரு இணைய தளத்திற்கு அழைத்துச் செல்லப் படுவீர்கள்.இங்கு பலவகையான வீடியோ கேம்ஸ் பட்டியலிடப்பட்டிருக்கும்.இங்குள்ள நியூஸ் ஐகானில் கிளிக் செய்தால் வீடியோ கேம்ஸ் குறித்த அனைத்து செய்திகளையும் பெறலாம்.



கேம்ப்ளை(Gamefly) என்பது வீடியோ கேம்களுக்கான இன்னொரு அருமையான வெப்சைட்.இந்த தளம் லேட்டஸ்ட் வீடியோ கேம்ஸ்களை தொடந்து புதுப்பித்துத் தந்து கொண்டே இருக்கும்.இதன் மூலம் ஒரு வீடியோ கேமினை அமெரிக்காவில் வாடகைக்குக் கூட பெறலாம்.இதில் தற்போது 6000க்கும் அதிகமான வீடியோ கேம்ஸ் உள்ளன.பலவகையான கேம்ஸ் விளையாடும் சாதனங்களுக்கான (Playstation 3,Playstation 2,PSP,XBox 360,XBox,Wii,GameCube,Nintendo DS,Gameboy etc.) கேம்ஸ்கள் இங்கு உள்ளன.இது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு கேம்ஸ்களை வழங்குமா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.

உங்கள் Text பைல்களை பேசவைக்க...!!!


மின்னஞ்சல் அல்லது ஒரு இணையத்தளத்தில் உள்ளவற்றை நீங்கள் படிக்க சிரமபட்டால் அந்த வரிகளை ஒரு Text File-லில் Copy செய்து விட்டு இந்த மென்பொருள் மூலம் அதை கேட்க்கலாம்.இதனால் படிக்கின்ற வேலை உங்களுக்கு மிச்சம் ஆகிறது.இந்த Text File-லை நீங்கள் WAV,MP3 or VOX Files ஆக Convert செய்து சேமித்து வைத்து கொள்ள முடியம்.
இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Instal செய்த பின்பு அந்த மென்பொருளை Open செய்யவும்.

படத்தில் உள்ளது போல

                               


பின்பு அந்த மென்பொருள்லில் உள்ள Open எனும் Option-ய் பயன்படுத்தி ஒரு Text File-ய் Open செய்து விட்டு. கீழ உள்ள பட்டனை

                                                                          

அழுத்தினால் உங்கள் Text File படிக்கப்படும்.

இந்த மென்பொருள்ளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..

ஹோம்வொர்க் இல்லாத ஹோம்லி பள்ளி !


    ஹோம்வொர்க் கிடையாது...
    ரேங்க் கார்டு கிடையாது...
    மிரட்டுவதும், அடிப்பதுவும் கிடையவே கிடையாது...
    இப்படி எல்லாம் சொல்கிற ஒரு பள்ளி இருந்தால், எப்படி இருக்கும்?
    பட்டுக்கோட்டை அருகே, குறிச்சியில் உள்ள ஐ.பி.இ.ஏ. பள்ளிதான் அது. அந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. ''தமிழ்நாடு அரசு, செயல்வழிக் கல்வி முறையைக் கொண்டுவருவதற்கு முன்பே, இந்தப் பள்ளி தொடங்கப்பட்ட 2002-ல் இருந்து செயல்வழிக் கற்றல் முறையில் கற்பிக்கப்படுகிறது'' என்றனர், பள்ளியின் அறங்காவலர் க.கிருட்டிணன் மற்றும் தாளாளர் ரா.சோமசுந்தரம்.
    '' 'சைலம் திசு, நீரைக் கடத்தும்’ என்பதை துளசிச் செடி மூலம் சோதனை செய்வது ஏன்? துளசிச் செடியை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? இப்படி, நிறையக் கேள்விகள் கேட்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்களுக்குப் பதில் சொல்வதற்காக, நாங்கள் நிறையப் படிக்கிறோம்'' என்கிறார், அறிவியல் ஆசிரியை முத்தமிழ்ச் செல்வி.
    ''மனப்பாடப் பகுதியைத் தவிர, வேறு எதையும் எங்கள் மாணவர்கள் மனப்பாடம் செய்வது இல்லை.  புரிந்துகொண்டுதான் படிக்கிறார்கள். ஆங்கிலத்தை ஃபோனட்டிக்ஸ் (Phonetics) முறையில் கற்றுத்தருவதால், நாங்கள் தவறாகச் சொன்னாலும் திருத்துவார்கள்'' என்று பெருமையாகச் சொல்கிறார், ஆங்கில ஆசிரியை பாலசுந்தரி.
    இந்த முறையில் கற்ற 4-ம் வகுப்பு மாணவன், 8-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தைச் சரளமாகப் படிக்கிறான். மாணவர்கள் துறுதுறு என்று இருந்தால், ஆசிரியர்களால் சமாளிக்க முடியுமா?
    ''கற்றலை எளிமையாக்குவதில் தொடர்ந்து செயலாற்றும் கிருஷ்ணமூர்த்தி, மாதவன், அமலராஜன் ஆகியோர், வருடத்துக்கு மூன்று முறை எங்கள் பள்ளிக்கு வந்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துகிறார்கள். மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்வது, எளிமையாகக் கற்றுக்கொடுப்பது எப்படி என்பதை, அந்தப் பயிற்சி வகுப்பில் தெரிந்துகொள்கின்றனர்'' என்கிறார், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை வாசுகி.
    அப்போது, 'ஹோய்...’ என மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இருந்து சத்தம் வந்தது. அங்கே, ஆசிரியைகளும் மாணவர்களும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தார்கள். அதன்  தலைமை ஆசிரியர் வினோத் கிருபாகரன், அந்த விளையாட்டுக்கு நடுவர் போல நின்று ரசித்துக்கொண்டிருந்தார். ''தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் பாடம் நடத்தினால், கவனிப்பு குறையும். அதனால், இப்படி விளையாட்டு, படிப்பு என்று நடக்கும்'' என்றார்.
    அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, மாணவர்கள், கூட்டமாக அவரை இடித்துக்கொண்டு ஓடினர். கூட்டத்தின் நடுவே கோமாளி வேடத்தில் ஒருவர் ஓடினார். அவரின் முகம், வண்ணங்களால் ஒளிர்ந்தது. கையில் ஒரு கஞ்சிராவைத் தட்டிக்கொண்டே செல்ல, சுட்டிக் குழந்தைகள் அவரோடு ஓடினர். அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளமாகியது.
    முருகு.சரவணன் என்கிற அவர், மாணவர் விடுதியின் வார்டனாக இருக்கிறார். பள்ளியின் ஆண்டுவிழா, சுதந்திர தின விழா போன்ற நாட்களில் கோமாளி அவதாரம் எடுப்பார். அன்று நாம் சென்றிருந்ததால், மேலும் ஒரு சிறப்பு தினமாகிவிட்டது மாணவர்களுக்கு.
    ஒரு மரத்தை நோக்கி ஓடிய அவர்கள், சுற்றிச் சுற்றி வந்து, குரங்குகளைப்போல சத்தமிட்டனர். குல்லாவைப் பிடுங்கிக்கொண்டு ஓடும் குரங்குக் கதையை நாடகமாக மாற்றுகிறார் முருகு.சரவணன்.  '' 'ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கோமாளி வேண்டும்’ என்று சிறுவர் நாடகக் கலைஞர் வேலு சரவணன் சொல்லியிருந்தார். அதனைப் படித்த நான்   கோமாளியாக மாறினேன்'' என்றவரின் தலையில் இருந்த குல்லாவைப் பறித்துக்கொண்டு ஓடுகிறார்கள் மாணவர்கள்.
    ''இப்படி ஆட்டம், பாட்டம் என இருந்துவிட்டு, படிப்பில் கோட்டைவிட்டுவிடுவார்களோ... என்று யோசிக்க வேண்டாம். இந்த ஆண்டு 10-ம் வகுப்பில் நூற்றுக்கு 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்தப் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு பெற்றோரால் மாற்றப்பட்ட சிலர், அழுது, அடம் பிடித்து இந்தப் பள்ளிக்கே வந்துள்ளார்கள்'' என்றார், வினோத் கிருபாகரன்.
    '' மாற்றுத்திறனாளி நிர்மல் குமார், இங்கு படித்தவர். வீல் சேரில்தான் வருவார். வினோத் என்கிற பையன், நிர்மலுக்கு எல்லா உதவிகளையும் செய்தான். இதை யாரும் சொல்லாமல் அவனாகவே செய்தான்'' என்றார் ஆசிரியை மலர்விழி.
    ராமானுஜம் என்பவர் இங்கு உதவியாளராகப் பணிபுரிகிறார். காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. ஆனால், அவர் சொல்வதை மாணவர்களும் மாணவர்கள் சொல்வதை அவரும் சரியாகப் புரிந்துகொள்கின்றனர்.
    ''நான், ஒருநாள் வேலைக்கு வரவில்லை என்றால், அடுத்த நாள் ஒவ்வொரு மாணவரும் என்னிடம் வந்து ஏன்... ஏன்? என்று அன்போடும் அக்கறையோடும் கேள்வி கேட்கிறார்கள். அடுத்த முறை லீவு போடவே மனசு வராது'' என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார், இந்தப் பள்ளியில் படித்து, இந்தப் பள்ளியிலேயே ஆசிரியையாகப் பணியாற்றும் உஷா ராணி.

சமூக சேவை தொடர்பான படிப்புகள்!


''சமூக சேவை என்பது யார் வேண்டு மானாலும் செய்யலாம். ஆனால், அதையும் நேர்த்தியாகச் செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தருகின்றன சமூக சேவை தொடர்பான படிப்புகள். ஒரு இயற்கை பேரிடர் நடக்கும்போது அந்த இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் ஏற்படும், அவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் உதவ வேண்டும் போன்ற ஒவ்வொரு விஷயங்களும் இந்த படிப்புகள் மூலம் கற்றுக் கொள்கிறார்கள் மாணவர்கள்.

1952-ம் வருடம் தொடங்கப்பட்ட மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் தென் இந்தியாவில் சமூக சேவை தொடர்பான படிப்புகளுக்காக தொடங்கப்பட்ட முதல் கல்லூரி. இங்கு இருக்கும் அனைத்துப் படிப்புகளும் முதுகலைப் படிப்புகள். மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் (எம்.எஸ்.டபிஸ்யூ.), எம்.எஸ்.சி. கவுன்சிலிங் சைக்காலஜி, எம்.ஏ. மனிதவள மேம்பாடு, எம்.ஏ. என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட், எம்.ஏ. ஹியூமன் ரிசோர்ஸ் அண்ட் ஆர்கனைசேஷன் டெவலப்மென்ட் போன்ற படிப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தும் சென்னை பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை.

இந்த படிப்புகளைப் பொறுத்தவரை, தியரி வகுப்புகளைவிட களப்பணிதான் அதிகமாக இருக்கும். அதாவது, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்தான் வகுப்பறையில் பாடம் நடத்துவார்கள். மற்ற நாட்களில் களப்பணிக்குச் சென்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். வார இறுதியில் அவர்கள் மேற்கொண்ட களப்பணியின் ரிப்போர்ட்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எந்த வகையான டிகிரி முடித்தவர்களும் இந்த படிப்பில் சேரலாம். நுழைவுத் தேர்வின் மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத் தேர்வில் வாங்கும் மதிப்பெண் மற்றும் டிகிரியில் வாங்கிய சதவிகிதம் ஆகியவற்றைக் கணக்கிட்டு மெரிட்டில் மதிப்பெண் வாங்குகிறவர்களுக்கு அட்மிஷன் கிடைக்கும்.

வேலை வாய்ப்பு எப்படி?

தற்போது சமூக சேவை என்பது புரொஃபஷனல் படிப்பாக அங்கீகரிக்கப் படுவதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. மருத்துவ மனோதத்துவம், தொழிற்சாலை மனோதத்துவம், குடும்ப நல நீதிமன்றங்கள், சமூக விழிப்புணர்வு, சுகாதாரத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் துறை, சி.எம்.டி.ஏ., என்.ஜி.ஓ. அமைப்புகள் போன்றவற்றில் இப்போது வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் மாணவர் களைத் தேர்வு செய்கின்றனர். இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சமூக சேவை தொடர்பான படிப்புக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.''

தமிழில் 'ஆஃப்லைன் அகராதி'யை இலவசமாக வழங்கும் இ-கலைவன்!



இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் - தமிழ்' அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர்.

தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை - சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், 'இ-கலை' கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஓர் ஆண்டு காலம் முழுமையாக உழைத்து, இவர் யுனிகோடில் உருவாக்கி இருக்கும் அகராதியின் பெயர் - ‘களஞ்சியம் அகராதி'.

ஆன்லைனிலும், தொழில்நுட்ப உலகிலும் தாம் கடந்து வந்த பாதையை விவரித்த சேகர், ‘‘நான் பிறந்த ஊர் போத்தம்பாளையம் என்னும் குக்கிராமம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத எங்கள் நெசவு குடும்பம் திருப்பூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அறிவை கற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏதுவாக இல்லை. இந்நிலையில் வானொலியிலும், பத்திரிகைகளிலும் வரும் அறிவியல் சம்பந்தமான் கட்டுரைகளை கேட்டும், படித்தும் ஆராய்ந்தும் திறமையை வளர்த்துக்கொண்டேன்.

எங்கள் கிராமத்து பள்ளியில் நாங்கள் ஆசிரியர்கள் வந்தால் "காலை வணக்கம் ஐயா'' என்றும், அட்டென்டன்ஸ் எடுக்கும்போது "உள்ளேன் ஐயா" என்றும் 10 வருடங்கள் பழகிய நாக்கு, நகரத்துக்கு வந்து “Good morning Sir”, "Present Sir”-ருக்கு பழக பல மாதங்கள் ஆகிவிடும். அந்தப் பள்ளி மாணவர்களிடம் கேட்டால் அவமானமாகிவிடும் என்பதால் அவர்களிடமும் கேட்கமாட்டோம். Dictionary என்பது படிக்கும் காலம் வரை ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். காரணம் அப்பொழுதெல்லாம் வாத்தியார் எழுதி கொடுக்கும் நோட்டு புத்தகங்கள்தான் வீட்டில் வாங்கி தருவார்கள். அதில் Dictionary இருக்காது.

கிராமத்தில் உள்ளவர்களுக்கு எப்படி தொடங்கவேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று விளக்கமளிக்கூடியவர்கள் குறைவாக உள்ள காரணத்தால், மாணவர்கள் புரியாமல் படிப்பதனால் கால விரயத்துடன் படித்தது பயனற்றதாக ஆகிவிடுகிறது. அதைப் போக்க அனைத்தும் அடங்கிய எளிமையான ஒரே ஒரு நூல் தமிழில் இருந்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

ஆங்கிலத்தில் கணினி, மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப அறிவுள்ள புத்தகங்கள் ஏராளம். அவற்றில் வரும் வார்த்தைகளை புரிந்துகொள்வது மாற்று மொழிக்காரர்களுக்கு அதிலும் தமிழ் மொழி கொண்டவர்களுக்கு எப்போதுமே சவால்தான். இன்னும் நிறைய பேருக்கு உச்சரிப்பில் "Message”- “மெஜேஜ்'' ஆகிவிடும், “Fan" - “ஸ்பேன்" ஆகிவிடும்.

இன்றைய கணினி பயன்பாட்டில் இணையத்தில் இருந்து ஏராளமாக நமக்கு வேண்டிய புத்தகங்களை PDF, EBUP போன்ற கோப்புகளில் இலவசமாக Download செய்து கொண்டு படிக்கலாம். ஆனால், இங்கும் பிரச்னை வார்த்தைகளுக்கான பொருள்தான். இணையம் இருந்தால் இணையத்தில் தேடிக்கொள்ளலாம். அதில் நமது கவனமும், நேரமும் வீணாகும். இன்டர்நெட்டில் எலி பிடிக்கபோய் குரங்கை பிடித்து வருவோம்.

பத்தாவது வரை தமிழில் படித்தேன். அதுவரை தமிழில் கற்றதால் ஆங்கிலம், அறிவியல் கணினி சம்பந்தபட்ட வார்த்தைகள் மிகப் புதிதாகக இருந்தன. அதற்கு விளக்கம் தேடி நூலகம் சென்று படிப்பேன். இருந்தபோதும் ஒரு முழுமையாக என் தேடல்களுக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. இதை அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டுமென்ற என்னுடைய கனவு கணினியில் சாத்தியம் என்பது புரிந்தது. இது சம்பந்தமான தேடல்களில் கணினி மொழிகளை பலவற்றையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் பிறந்தது.

நான் கணினியில் புரோகிராமிங் கற்றுக்கொள்ள PDF கோப்புகளில் உள்ள ஆங்கில புத்தகங்களை படிக்கும்போது ஏற்பட்ட இடர்கள் ஏராளம். “For loop”, “If condition”-க்கு எல்லாம் பொருள்தேடியவன் நான். இதைப்போன்ற இடர்பாடுகள் தமிழில் படிப்பவர்களுக்கு இருக்கக்கூடாது என்று அவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் உதித்தது. English-English ஏராளமான அகராதிகள் உண்டு. ஆனால், தமிழில் ஒரு சிலவே உண்டு. அவையும் கால மாற்றத்திற்கு ஏற்ப ஒருங்கு குறிக்கு (Unicode) மாற்றமடையவில்லை, அது தவிர, புதிய Windows 7, Windows 8 போன்ற நவீன இயங்கு தளங்களில் இயங்காது. தமிழில் Unicode அகராதிகள் ஆன்லைனில் உண்டு. ஆனால் Desktop-ல் இயங்கும் அகராதி இல்லை. இதன் விளைவாக உருவானதுதான் ‘களஞ்சியம் அகராதி'.

என்னுடைய கணினி அனுபவ அறிவைப் பார்த்து ஒரு சில மென்பொருள் கம்பெனிகள் அழைத்தபோதும், எனக்கு ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாமையால் அந்த வாய்ப்புகள் தவறிவிட்டன. என்னைப் போல சிரமப்படும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற வரையில் HTML, CSS, Javascript, Java, C, C# , SQL, Animation, Electronics மற்றும் Embedded Project போன்றவற்றை தமிழில் மாணவர்களுக்கு கற்றுத்தருகிறேன்.

கல்வியில் உயர்ந்த சமுதாயமே உலகின் உயர்ந்த சமுதாயம். அந்த உயர்ந்த நோக்கோடு தான் தமிழக அரசு அனைத்து மாணாக்கர்க்கும் மடிக்கணினி தந்துள்ளது. அதனால் மாணவர்களின் அறிவு மிகவும் மேம்பாடு அடையும். அதற்கு கூடுதல் உந்து சக்தியாக இருக்க கல்வி பயன்பாட்டிற்கான இந்த களஞ்சியம் அகராதி இலவசமாக இணையத்தில் Download செய்துகொள்ளலாம்.

இன்றைய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் படிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் படிப்பை கெடுப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் இந்த சமுதாயத்திற்கும், உலகிற்கும் செய்ய நிறைய கடமைகள் இருக்கின்றன என்பதை கருத்தில் கொண்டால் வெற்றியடைவது என்பது நிச்சயம். இந்த உலகில் வெறும் 2% மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீதி 98% Dark Mater-ராக இன்னும் கண்டுபிடிக்கபடாமல் உள்ளன. அதில் வருங்காலத்தில் தமிழகத்தின் கண்டுபிடிப்பின் பங்கு அதிகமாக இருக்கட்டும்.

எனக்கு பிடித்த பொன்மொழி உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். "என்னை தலை குனிந்து படி, உன்னை தலை நிமிரச் செய்வேன்- என்று சொன்னது புத்தகம்."

இந்த உலகம் என்பது நமக்கு சொந்தமல்ல. இதை நம் எதிர்கால சந்ததியிடம் இருந்து கடன் வாங்கியுள்ளோம். அதை பத்திரமாக, நாம் அனுபவிக்கும் இத்தனை வசதிகளுடனும் அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அதுதான் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் இப்போதுள்ள தலையாய கடமை. எனவேதான் எனது ஆஃப்லைன் அகராதியை இலவசமாகவே வழங்குகிறேன்'' என்றார் சேகர்.

களஞ்சியம் அகராதியின் சிறப்புகள்: 

* ஒருங்குகுறி (Unicode) கொண்டு உருவாக்கப்பட்டது.

* 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிப்பட்ட வார்த்தைகளுக்கான பொருள் கொண்டது.

* 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள் தரும் இணைப்பு வார்த்தைகள்.

* ஆங்கிலம் - தமிழ், ஆங்கிலம் - ஆங்கிலம், தமிழ் - தமிழ் மற்றும் பல்கலைகழகக் பேரகராதி ஆகிய அனைத்து அகராதிகளையும் உள்ளடக்கியது.

* 3000-க்கும் அதிகமான படங்கள்.

* உலக நாடுகளின் கண்டம், வரைபடம், கொடி கொண்டது.

* தமிழில் (Built-in Tamil Typing) தட்டச்சு செய்து வார்த்தைகளுக்கு பொருள் தேடும் வசதி.

* தமிழிலும், ஆங்கிலத்திலும் படித்துச் சொல்லும் (LH-Michelle & LH-Michael).

* கணினியில் எங்கிருந்தும் ஒரு வார்த்தையை தேர்வு செய்துகொண்டு Shortcut key (Ctrl + ~) அழுத்தினால் வார்த்தைக்கான பொருள் கிடைக்கும்.

* தானியக்க இருமொழித் தேடுதல் (Automatic encoding)

* புதிய வார்த்தை, பொருள் மற்றும் படங்களை பயனாளரே இணைத்து கொள்ளும் வசதி.

* Free Software (இலவச மென்பொருள்)

* தமிழில் முதல் மேஜைபயன்பாட்டு (Windows Desktop) ஒருங்குகுறி (Unicode)  அகராதி.

* Destop-ல் விரும்பிய வார்த்தைகளை விரும்பிய வண்ணங்களில், எழுத்துருக்களில் அமைத்துக் கொள்ளலாம்.

* Windows XP, Windows 7, Windows 8  சார்ந்த இயங்கு தளங்களில் இயங்கும்.

சேகர் உருவாக்கியுள்ள களஞ்சியம் அகராதியை டவுன்லோடு செய்ய க்ளிக்க வேண்டிய இணைப்பு -



சேகரின் அதிகாரப்பூர்வ தளம் www.ekalai.com
தொடர்புக்கு - 9790057454

மாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா!


மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ போன்ற பாடத் திட்டங்கள் மூலமாகப் படிக்கும் மாணவர்களுக்கே சவாலாக இருக்கக் கூடியது... 'ஐ.ஐ.டி' என்று சொல்லப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ மெயின்). நாடு முழுக்க, பலவிதமான தயாரிப்புகளுடன், பலதரப்பட்ட ஆதரவுகளுடன், வசதியான பள்ளிகளில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் இந்தக் கடினமான களத்தில் தேறுபவர்கள் ஒரு சிலரே. இத்தகைய சூழலில்.... சென்னை, சைதாப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர், இதில் பங்கேற்று கலக்கலான வெற்றி கண்டிருப்பது... பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!
சென்னையைச் சேர்ந்த ஃபாத்திமா ஷபானா மற்றும் பவித்ரா இந்த இருவருரையும் சந்தித்தோம்.
''ஒன்பதாவது படிச்சப்போ, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'ஃபிட்ஜி அகாடமி’, எங்க பள்ளியில இருந்து ஒரு தேர்வு மூலமா எட்டு பேரை தேர்ந்தெடுத்தாங்க. வாரத்துல மூணு கிளாஸ் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கு கோச்சிங் கொடுத்தாங்க. சாயந்திரம் 5 - 8 மணி வரை வகுப்பு நடக்கும். அப்புறம் வீட்டுக்கு வர 9 மணி ஆகிடும். சாப்பிட்டு, அங்க நடத்தின படங்களைப் படிப்பேன். காலையில 5 மணிக்கு எழுந்து, ஸ்கூல்ல நடத்தின பாடங்களைப் படிப்பேன். ரெண்டு பாடங்கள்லயும் கவனம் செலுத்த கஷ்டமாதான் இருக்கும். ஆனாலும் நல்ல காலேஜ்ல சேரணும்னு நம்பிக்கையோட படிச்சேன்!'' எனும் ஃபாத்திமா ஷபானாவின் அப்பா, இரவு நேர 'டிபன்’ கடை ஒன்றில் வேலை பார்க்கிறார்.
''ரொம்ப கம்மியான சம்பளம்தான். அதில் குடும்பச் செலவுகளைப் பூர்த்தி செய்றதே கஷ்டம். நல்லா படிக்கிற பிள்ளைய, எப்படி மேல படிக்க வைக்கிறதுனு அவங்களுக்கு கலக்கம்தான். ஆனாலும், முயற்சியைக் கைவிடாம படிச்சேன். இப்போ ஐ.ஐ.டி தேர்வுல 83 மார்க் வாங்கிட்டேன். இதுல 74 மார்க் எடுத்தாலே பாஸ்தான். அதேமாதிரி ப்ளஸ் டூ பொதுத்தேர்வுலயும் 1109 மார்க் வாங்கிருக்கேன்'' என்ற ஃபாத்திமா, தன் அம்மாவை அருகில் அழைத்து,
''எங்கம்மா முகத்துல எவ்வளவு சந்தோஷம் பாருங்க. டீச்சர்ஸ், ஹெட்மாஸ்டர் எல்லாரும் என் படிப்புக்கு உதவி பண்றது, நேரத்துக்கு கோச்சிங் கிளாஸுக்கு அனுப்புறதுனு ரொம்ப ஊக்கப்படுத்தினாங்க. இப்போ நிறைய பேர் எனக்கு பண உதவி செய்றதாவும், நிறைய வங்கிகள் படிப்புக்கு லோன் உதவி செய்றதாவும் போன் மூலமா தெரிவிச்சிருக்காங்க. எங்கப்பாவுக்கு சுமை கொடுக்கலைங்கறது, எனக்கு நிம்மதியா இருக்கு.
இன்னும் ஒரு தேர்வு பாக்கியிருக்கு. அதில் வெற்றிபெற்று, ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுப்பதுதான் என் விருப்பம். படிப்புதான் உண்மையான செல்வம்னு, எங்களைப் போன்ற ஏழைப்பட்ட குடும்பங்களுக்கு எல்லாம் நம்பிக்கை வர, நானும் உதாரணமா இருப்பேன்!''
- அழகாகச் சிரித்தார் பாத்திமா.
ன்னொரு மாணவியான பவித்ராவின் ஐ.ஐ.டி மதிப்பெண்... 78. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் 1129. கண்களில் துள்ளல் பவித்ராவுக்கு.
''கோச்சிங் கிளாஸ்ல சொல்லிக்கொடுத்த நிறைய விஷயங்கள் எனக்கு படிப்புலயும் உதவியா இருந்துச்சு. தினமும் நைட் தூங்க 12 மணிக்கு மேல ஆகிடும். திரும்ப காலையில 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு படிக்க ஆரம்பிச்சுருவேன். அப்பாவும் அம்மாவும் தேவையான எல்லா உதவிகளையும் செஞ்சு கொடுத்தாங்க.
அடுத்து எழுதப்போற எக்ஸாம் இன்னும் கஷ்டமா இருக்கும். இருந்தாலும் விடாம படிச்சுக்கிட்டே இருக்கேன். எப்படியாவது ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்துல சேர்ந்தாகணும். கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சாலும் ஐ.ஐ.டி-யில படிக்கலாம்னு பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தணும்... எங்க பள்ளிக்கும் பெருமை தேடிக் கொடுக்கணும்!'' எனும் பவித்ராவுக்கு பிடித்த சப்ஜெக்ட், ஃபிசிக்ஸ்.
''அதனாலதான்... ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிச்சு சயின்டிஸ்ட் ஆகுறதை லட்சியமா வெச்சிருக்கேன்!'' என்று பவித்ரா சொல்ல,
''பத்தாவது பரீட்சையில 486 மார்க் வாங்கி, சென்னை அளவில் மூன்றாம் இடம் பிடிச்சி, அப்துல் கலாம் கையால விருது வாங்கினதையும் சேர்த்து சொல்லு!'' என்கிறார் பவித்ராவின் அப்பா பெருமிதத்துடன்.
இந்த இருவரும், இப்போது தேர்வில் பெற்றிருக்கும் வெற்றியின் மூலமாக என்.ஐ.டி, சி.எஃப்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இன்னும் ஒரு தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ- அட்வான்ஸ்) பாக்கியிருக்கிறது. இதில் வெற்றி பெற்றால், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்துவிடும்.
பள்ளிக்குப் பெருமையையும், பெற்றவர்களுக்கு சந்தோஷத்தையும், எளிய குடும்பத்து மாணவர் களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ள இந்த வெற்றிப் பெண்களுக்கு வாழ்த்துக்கள்!
-அவள் விகடனிலிருந்து...

குழந்தைகளின் அறிவை வளர்க்கும் புதுமையான கணினி விளையாட்டு


                  விளையாட்டுகள் என்பது மனிதனின் உடலையும் ;உள்ளதையும் வலுப்படுத்தும்..அனால் இன்று அனைவர்க்கும் விளையாட்டுகள் என்றால் computer games தான் முதலில் நினைவுக்கு வரும்..ground-இல் cricket.foodball விளையாடும் குழந்தைகளை காட்டிலும் computer முன்னால் உட்கார்ந்து கொண்டு cricket விளையாடும் குழந்தைகள் தான் அதிகம்..

                                                   

இன்னும் சில விளையாட்டுகள் குழந்தைகளின் உள்ளதை கெடுப்பவைகளாக இருக்கின்றன..சில விளையாட்டுகள் அறிவை வளர்பவைகளாக இருக்கின்றன..எடுத்துகாட்டாக chess,Sudoku போன்றவற்றை சொல்லலாம்..அனால் இவை சிலநேரங்களில் சலிப்படைய செய்யும்..குழந்தைகளுக்கு interesting காகவும் அதை சமயத்தில் அறிவை வளர்பவையாகவும் இருக்கும் games ஏராளம்..அதில் ஓன்று தான் farm frenzy pizza party..



Pizza தயாரிப்பது தான் இந்த game..அதற்கு தேவையான பொருட்களை நமை தயாரித்து கொள்ள வேண்டும்.. குறிப்பிட நேரத்துக்குள் நாம் தயாரித்து விட்டால் தங்க பதக்கம் கிடக்கும்..இல்லையென்றால் வெள்ளி பதக்கம் கிடைக்கும்..நமது திறமையை பொறுத்து நமக்கு awards கிடைக்கும்..இது விவசாயத்தை மையபடுத்தும் game ஆக இருப்பது கூடுதல் சிறப்பு..இதில் ஆடு,மாடு,கோழி,பூனை நாய்,,போன்ற விலங்குகளை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்..Truck ,flight போன்ற வாகனங்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் அவர்கள் அறிவை வளர்பதாகவும் இருக்கும்..