Monday, 4 August 2014

இலவசமாக IDM 7.1 (INTERNET DOWNLOAD MANAGER) புதிய பதிப்பு (PRE CRACKED)

 







      இணையத்தில் நாம் அன்றாடம் பலவற்றை தரவிறக்கம் செய்கிறோம் . அது படங்களாக , பாடலாக , கோப்புகளாக கூட இருக்கலாம் . இவை அனைத்தையும் மிக எளிதில் தரவிறக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் இந்த IDM. இதன் புது பதிப்பான  7.1 ஐ உங்களுக்காக வழங்குகிறேன்.இது ஏற்கனவே கிராக் செய்யபட்டுள்ளதால் சாதரணமாக இன்ஸ்டால் செய்தால் போதும்.



பயன்கள் :

  1. வேகமாக தரவிறக்கலாம்
  2. வேண்டும் பொழுது PAUSE செய்யலாம் .
  3. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கலாம்
  4. தானாகவே UBDATE ஆகும் .
  5. FIREFOX உடன் தானாகவே Integrate ஆகிவிடும் . இதனால் விடியோ , ஆடியோ பைகளில்  தானாகவே டவுன்லோட் பட்டன் இணைந்துவிடும் .

IDM 7.1  புதிய பதிப்பை DOWNLOAD செய்ய :

                         IDM DOWNLOAD

  குறிப்பு : இது ஏற்கனவே கிராக் செய்யபட்டுள்ளதால் சாதரணமாக இன்ஸ்டால் செய்தால் போதும் .

இ-டிக்கெட் எடுக்க புதிய வெப்சைட்: ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம்


சென்னை: ரெயிலில் பயணம் செய்வதற்கு இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் வீட்டில் இருந்தபடியே பயணத்தை உறுதி செய்ய முடிகிறது. அதிலும் சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களில் இது தவிர்க்க முடியாதாகி விட்டது. காலை 10 மணி முதல் 12 மணி வரை இ-டிக்கெட் எடுப்பதற்கு கடும்போட்டி ஏற்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் இ-டிக்கெட் எடுக்க பலரும் முயற்சி செய்வதால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதில் பெரும் சவாலாக இருக்கிறது.

ரெயில் இ–டிக்கெட் விற்பனையை இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) செய்து வருகிறது. ரெயில் டிக்கெட் விற்பனை ஏஜென்சிகளுக்கும் இ.டிக்கெட் விற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரெயில் இ–டிக்கெட் எடுக்கும் போது இண்டர்நெட் ஒர்க் பிரச்சினையால் சில நேரம் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக புதிய வெப்சைட் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது.

இ–டிக்கெட் எடுப்பவர்கள் நீண்ட நேரம் காத்து இருக்காமல் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட் எடுக்கும் வகையில் இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. www.nget.irctc.co.in என்ற புதிய இணையதளம் வழியாக இ–டிக்கெட் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பழைய வெப்சைட்டான www.irctic.co.in -க்கு பதிலாக இந்த புதிய வெப்சைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வெப்சைட் வேகமாக செயல்படக்கூடியது என்பதால் காத்திருக்கும் நேரம் குறைகிறது. இந்த புதிய வெப்சைட் பற்றிய தகவல் வழக்கமாக பயன்படுத்தும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் இ–டிக்கெட்டுகள் வரை எடுக்க முடியும். ஏற்கனவே உள்ள இ–டிக்கெட் முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் டிக்கெட்டுகள் கையாளப்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவிக்கிறது.

மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்குஅமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது



சென்னை: கற்பித்தலில் சிறந்து விளங்கியதற்காக, மாநகராட்சி பள்ளி ஆசிரியை ஒருவருக்கு, அமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. முதல் இந்தியர் இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியில், 46 பள்ளிகளில் உள்ள 54 ஆசிரியர்களுக்கு, ஈஸிவித்யா நிறுவனம் மூலம், கற்றல், கற்பித்தலில் புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.


கற்பித்தலில் சிறந்து விளங்கியதற்காக, அமெரிக்காவின் 'பியர்ஸ்ன் பவுண்டேஷன்' நிறுவனம், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை நடுநிலை பள்ளி ஆசிரியை, ஜரீனாபானுவிற்கு, 'குளோபல் பிரிட்ச் ஐ.டி.,' என்ற விருதினை வழங்கி உள்ளது.


இந்த விருதை பெற்ற முதல் இந்தியர், ஜரீனாபானுதான். விருது பெற்ற அவரை, மேயர், சைதை துரைசாமி, கல்வித்துறை துணை கமிஷனர் லலிதா ஆகியோர் பாராட்டினர்.விருது ஏன்?கற்பித்தல் சாதனங்களை திறம்பட மற்றும் புதுமையான முறையில் பயன்படுத்தியதற்காக, மாணவர்களின் கற்றல் அம்சங்களை மறுவரையறை செய்ததற்காகவும், வகுப்பறைக்குள் கற்றல், கற்பித்தல் தரத்தை மேம்படுத்த நோக்கியா அலைபேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது போன்ற காரணங்களுக்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம்: 10-ம் வகுப்பு மாணவர் கண்டுபிடிப்பு




     

   பழைய பொருட்களை கொண்டு கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அலகாபாத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார். 

                  டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்து வரும் சுதான்சு என்ற மாணவர் ரூ.4 ஆயிரம் செலவு செய்து இந்த இயந்திரத்தை தயாரித்துள்ளார். கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த இயந்திரம் தயாரித்த மின்சாரத்தை சேமிக்கவும் செய்கிறது. 

         இந்த இயந்திரத்தை கடற்கரையின் சமமான பகுதியில் வைத்துவிட்டால், ஒவ்வொரு அலையும் அதன் மீது மோதிச் செல்லும் போது ஒரு வோல்ட் மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்த மின்சாரம் டைனமொ வழியாக பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தை ஆறுகள் மற்றும் ஏரிகளிலும் பொருத்த முடியும். 

இந்த இயந்திரத்திற்கு 'ஷீ-ஷோர் எலக்ட்ரோ ஜெனரெட்டர்' என்று பெயரிட்டுள்ளார் சுதான்சு. இந்த கண்டுபிடிப்பிற்காக அவருக்கு 'சைல்டு சைன்டிஸ்ட்' சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

அவரது இயந்திர மாடலை சிறு சிறு மாற்றம் செய்தால் வணிக ரீதியாக அதனை பயன்படுத்த முடியும் என தொழிலதிபர் ராஜீவ் நாயர் தெரிவித்தார்
.

கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்கு பரிசு





கணிதவியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்க முடியாமல் இருந்த சிக்கலான கோட்பாட்டுக்கு இந்தியாவைச் சேர்ந்த நிகில் ஸ்ரீவாஸ்தவா, அமெரிக்காவைச் சேர்ந்த ஆடம் மார்க்கஸ், டேனியல் ஸ்பீல்மேன் ஆகியோர் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புக்காக, இவர்கள் மூவருக்கும் அமெரிக்காவில் உள்ள கணிதவியல் மற்றும் தொழில்துறையியல் கூட்டமைப்பு சார்பில் "ஜார்ஜ் போல்யா-2014' என்ற பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், நிகில் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்ட மூவரும் அந்தப் பரிசினை பெற்றுக் கொண்டனர். பெங்களூரில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றி வரும் நிகில் ஸ்ரீவாஸ்தவா, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்றவர்.

"குவாண்டம் மெக்கானிக்ஸ்' உடன் தொடர்புடைய கணிதவியல் கோட்பாடுகளுக்கு, கணிதவியல் நிபுணர்களான காடிசன், சிங்கர் ஆகிய இருவரும், 1959ஆம் ஆண்டு ஒரு கோட்பாட்டை வெளியிட்டனர். ஆனால் அந்தக் கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில், அதற்கு நிகில் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்ட மூவரும் நிரூபணம் கண்டுபிடித்துள்ளனர்.

ஹங்கேரியாவைச் சேர்ந்த கணித மேதை ஜார்ஜ் போல்யாவின் நினைவாக, அவரது பெயரில், அமெரிக்காவில் உள்ள கணிதவியல் மற்றும் தொழில்துறையியல் கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் பரிசை வழங்கி வருகிறது
.

திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி


         திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 1 லட்சம் குறுந்தகடுகள் இலவசமாக வெளியிடப்படும் என்றார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.

தென்காசி திருவள்ளுவர் கழகம் மற்றும் மூத்த குடிமக்கள் மன்றம் சார்பில் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

திருக்குறளின் 1330 குறள்களுக்கும் இசையமைத்து குறுந்தகடாக வெளியிட உள்ள அவரின் அரிய சேவையைப் பாராட்டி இந்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மூத்த குடிமக்கள் மன்றத் தலைவர் துரை.தம்புராஜ் தலைமை வகித்தார். செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினார்.

இதில், இசையமைப்பாளர் பரத்வாஜ் பேசியதாவது:

திருக்குறளை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் என்னுடைய நோக்கம். அதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து பெருமுயற்சியுடன் திருக்குறளுக்கு இசையமைத்து, இப்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு லட்சம் சி.டி.க்கள் தயாரித்து அதனை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறேன். அவற்றை இலவசமாக வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன் என்றார் அவர்.

மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம்


              மத்திய அரசின் சார்பில் திறமையுள்ளவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காண உதவும் வகையில் வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

www.niesbudnaukri.com என்ற அந்த இணையதளத்தை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட வழி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வேலை தேடுவோரும் இலவசமாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 150 பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் இந்த இணையதளத்தில் இடம்பெறும் என்று அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

காமராசர் (காமராஜர்) கட்டுரை


                  காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநிலம் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள்தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார்.இவர் "கருப்பு காந்தி" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

                தொடக்ககால வாழ்க்கை காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.
தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார்.

            சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர்திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

சிறை வாழ்க்கையும் படிப்பும்

           பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடுபோன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.

           ராசாசியி தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம்நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசு கைது செய்யப்பட்டுகல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடு அவர்களின் வாத திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர்சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக பெற்றார்.

அரசியல் குரு

            மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்திபிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது.இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின்வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.

தமிழக அரசியல் - தமிழக ஆட்சிப் பொறுப்பு

             1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி,கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.


காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:

  • மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.
  • தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
  • அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர்,ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)
  • அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்

          ராசாசி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

      காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர்,கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

  • பாரத மிகு மின் நிறுவனம்
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
  • மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
  • இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
  • நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
  • கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
  • மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.

அகிலஇந்திய காங்கிரசு தலைமை

     மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

         அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் சவகர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாசுதிரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.

இறுதிக் காலம்

       காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

நினைவுச் சின்னங்கள்


காமராசர் நினைவிடம், கிண்டி

தமிழ்நாடு அரசு காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில்அவருக்கு பெருந்தலைவர் காமராசர் நினவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது

Swami Vivekananda Short Biography




Swami Vivekananda (real name: Narendra Nath Datta) was born on 12th January 1863 in Calcutta (the Capital of British India at that time). He was an Indian Hindu monk and chief disciple of the 19th-century saint Ramakrishna Parahamhans. He took the responsibility of spreading Hinduism in India and contributed to the concept of nationalism in British India. Vivekananda founded the Ramakrishna Math and the Ramakrishna Mission. He was a key figure in the introduction of the Indian philosophies of Yoga and Vedanta to the Western world.

Childhood

Swami Vivekananda was born in a traditional Bengali family, to father Vishwanath Datta, who was an attorney at the Calcutta High Court and mother Bhuvaneswari Devi, a housewife. From his childhood days, he was interested in spirituality and uses to meditate before the images of Hindu deities. He was fascinated by wandering ascetics and monks.

Education

In 1871, Swami Vivekananda enrolled at Ishwar Chandra Vidyasagar's Metropolitan Institution, and studied there till the family moved to Raipur in 1877. In 1879, he entered Presidency College with first division marks. During college days, Swami Vivekananda founded his interest in various subjects, including religion, philosophy, social science, history, literature and art. He was keen into reading and used to read a lot of Hindu scriptures, including the Vedas, the Upanishads, the Bhagavad Gita, the Ramayana, the Mahabharata and the Puranas.

Career

In 1981, Swami Vivekananda became a disciple of Ramakrishna Paramhans. Though he followed him as his guru but was against idol worship, and went ahead in search of real god. After the death of Ramakrishna, Swami Vivekananda went ahead and founded first Ramakrishna Math in Baranagar in 1886. He vowed to wander like a monk. From 1888 to 1893 he visited many regions of India promoting Hinduism.

In 1893, Swami Vivekananda got a chance to visit west when the Parliament of the World's Religions opened on 11 September 1893 at the Art Institute of Chicago as part of the World's Columbian Exposition. There he began his speech with “Sisters and Brothers and of America”, for which he received standing ovation from a crowd of 7000. During his lecture tours in US and UK he actively promoted the ideologies of Vedas and formed Vedanta Society of New York in 1894. Though following his ill health he returned to India and spent his final years here.

At the End

Swami Vivekananda died on 4th July 1902. According to his disciples, Vivekananda went to his room and died while meditating. He attained ‘mahasamādhi’ – a term used by his followers. But the possible cause of death was reported as the rupture of a blood vessel in his brain. Vivekananda fulfilled his prophecy that he would not live forty years
.

எளியவர்களுக்கு ஏற்றம் தந்தவர் - காமராஜர்



கர்ம வீரர் எனப் பிரியத்துடன் அழைக்கப்பட்டவர் காமராஜர். 1903-ம் ஆண்டு ஜூலை 15 ல் விருதுநகரில் ஒரு தேங்காய் வியாபாரியின் மகனாகப் பிறந்தார். அவருடைய அப்பா குமாரசாமி. அம்மா சிவகாமி அம்மாள் .

காமராஜர் பள்ளி மாணவனாக இருக்கும்போதே அவரது அப்பா இறந்து விட்டார். குடும்பத்தை வறுமை சூழ்ந்தது. காமராஜருடைய அம்மா சிவகாமி அம்மாள் காதில் போட்டிருந்த நகையைத் தவிர குடும்பத்தில் இருந்த எல்லா நகைகளையும் விற்றார். அதை உள்ளூர் வியாபாரியிடம் கொடுத்தார். அதில் இருந்து கிடைத்த வட்டியைக் கொண்டு குடும்பத்தை நடத்தினார்.

பள்ளியில் காமராஜர் மிகவும் சாதாரணமான மாணவராகவே இருந்தார். ஆறாம் வகுப்பு வரைதான் படித்தார். பிறகு தாய்மாமா கருப்பையாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் கடையில் இருந்து திடீர் திடீரெனக் காணாமல் போய்விடுவார். வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோஸப் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நடத்தும் பேரணியில் கலந்துகொள்ளச் சென்றுவிடுவார். அந்தப் பருவத் திலேயே அவருக்குத் தீவிரமான அரசியல் ஈடுபாடு இருந்தது. குடும்பத்தைவிடச் சமூகமே அவருக்குப் பிரதானமாகப் பட்டது. உள்ளூரில் இருந்தால் அரசியல் கூட்டங்களுக்குப் போய்விடுகிறார் என்பதால் திருவனந்தபுரத்தில் உள்ள மற்றொரு உறவினரின் கடைக்குக் காமராஜரை அனுப்பி வைத்தனர்.

அங்கும் காமராஜரால் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை. அங்கே கோயில் இருந்த தெருக்களில் நடமாடக் கூடாது என இருந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வைக்கம் எனுமிடத்தில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. அதில் காமராஜர் கலந்துகொண்டார். உறவினர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தனர். ஆனால் காமராஜர் அதற்கும் வளைந்துகொடுக்கவில்லை. தனது 16-ம் வயதில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகி முழு நேரமும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1930-ல் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையிலான உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார்.

விருதுநகர் அஞ்சலகத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அவருக்காக வரதராஜுலு நாயுடுவும் ஜார்ஜ் ஜோஸபும் வாதாடி வெற்றிபெற்றனர். ஆனால் 1940-ல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்தபோது விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு நேர சமூகப் பணிக்குத் தன்னை ஒப்படைத்தபோது காமராஜருக்குக் கல்வியின் அவசியம் புரிந்தது. தேச விடுதலைக்காகப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறையில் இருந்த காலத்தில் கல்வியைத் தானாய்த் தேடிக் கற்றார்.

பின்னாளில் அவர் முதல்வரான பிறகு அனைவருக்கும் இலவசக் கல்வி என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அரசியலில் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியைக் குருவாகக் கொண்டு செயல்பட்டார் காமராஜர். 1936-ல் சத்தியமூர்த்தி மாகாண காங்கிரஸ் தலைவராக ஆனபோது காமராஜரை மாகாண காங்கிரஸ் செயலாளர் ஆக்கினார். நாடு விடுதலை அடைந்த பின்னர் காமராஜர் 1954-ல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட பக்தவத்சலத்தையும், சி. சுப்ரமணியத்தையும் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கிக்கொண்டார்.

அரசியலில் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியைக் குருவாகக் கொண்டு செயல்பட்டார் காமராஜர். 1936-ல் சத்தியமூர்த்தி மாகாண காங்கிரஸ் தலைவராக ஆனபோது காமராஜரை மாகாண காங்கிரஸ் செயலாளர் ஆக்கினார். நாடு விடுதலை அடைந்த பின்னர் காமராஜர் 1954-ல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட பக்தவத்சலத்தையும், சி. சுப்ரமணியத்தையும் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கிக்கொண்டார்.

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் அவரது மதிநுட்பத்தை வெளிப்படுத்துபவை. எளிய குடும்பங்களின் வறுமை ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தின்றுவிடக் கூடாது எனும் நோக்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை மாநில அளவில் கொண்டுவந்தார். ஒரே நபர் கட்சிப் பணியையும் அரசுப் பொறுப்பையும் வகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி 1963-ல் காமராஜர் திட்டம் என்பதைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தின்படி முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

1965-ல் இந்தியப் பிரதமர் நேரு மறைந்த பின்னர் லால் பகதூர் சாஸ்திரியையும் பின்னர் இந்திரா காந்தியையும் பிரதமராக்கினார். பிரதமர் பதவி தன்னைத் தேடி வந்த போதும் பெருந்தன்மையுடன் அதை மறுத்த மகா மனிதர் காமராஜர் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று காலமானார்.

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் அவரது மதிநுட்பத்தை வெளிப்படுத்துபவை. எளிய குடும்பங்களின் வறுமை ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தின்றுவிடக் கூடாது எனும் நோக்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை மாநில அளவில் கொண்டுவந்தார்.
காமராஜர் பிறந்தநாள்: ஜூலை 15

லஞ்சம் கேட்கிறார்களா ? தொலைபேசி எண்கள்.......


இதோ உங்கள் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள். 

Microsoft ன் அதிவேக Download Manager இலவசமாக


நாம் அதிகமாக உபயோகிப்பது மைக்ரோசாப்ட் படைபுகளைதான். தொடர்ந்து நிறைய படைப்புகளை வழங்கிவரும் மைக்ரோசாப்ட் இப்போது புதிய படைப்பாக இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் தரவிறக்க மென்பொருளை வழங்கியுள்ளது.
                                                         

Microsoft படைப்புகள் என்றாலே அனைத்தையும்பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தரவிறக்க மென்பொருளை இலவசமாக வழங்குகிறது மைக்ரோசாப்ட். அதுவும் மிக அழகாகவும் Simple 'ஆகவும் வடிவமைத்து வழங்கியுள்ளது.


                 
இதற்க்கான தரவிறக்க லிங்க் இதோ.

Skypeஇல் புதிய வசதி அறிமுகம்


உலகின் எப்பாகத்திலும் இருப்பவர்களை கண்முன்னே கண்டு உரையாடி மகிழு உதவும் வீடியோ அழைப்பு சேவை வழங்குனர்களில் முன்னிலை வகிப்பது ஸ்கைப் ஆகும்.இதனூடாக குரலை மாற்றி பேசுவதற்கு Skype Voice Changer எனும் மென்பொருள் உதவுகின்றது.

C# மொழியில் உருவாக்கப்பட்டு பல வகையான குரல் வகைகளை உள்ளடக்கியுள்ள இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களைக் கொண்ட டெக்ஸ்டாப் கணனிகளில் மட்டுமே செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

                                                   தரவிறக்கச் சுட்டி

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப போறீங்களா...! முதல்ல இத படிங்க பெற்றோர்களே


படிப்பு மட்டுமல்ல... பாதுகாப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஒன்றல்ல... இரண்டல்ல... கிட்டத்தட்ட 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறையை குதூகலமாக கழித்து விட்டு இன்று மாணவர்கள் பள்ளிக்கு செல்ல உள்ளனர். விளை யாட்டு, சுற்றுலா, பார்க், சினிமா என்று பெற்றோருடன் உற்சாகமாக கழித்த இந்த நாட்கள் மீண்டும் கிடைக்க 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

அந்த உற்சாகத்தில் இருந்து மீண்டு படிப்பு... படிப்பு...படிப்பு இதை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு மாணவர்கள் புத்தகப்பையுடன் பள்ளிக்கூட வாசலை இன்று மிதிக்க உள்ளனர்.

‘வாயைக்கட்டி, வயித்தை கட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டினு பணத்தை வாங்கி நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று படிக்க பணம் கட்டி முடிச்சாச்சு. இனி பிள்ளையோ, பொண்ணோ படிச்சு நல்ல மார்க் வாங்கணும். அவ்வளவுதான்’ என்று பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பர். இத்தோடு முடிந்து விடவில்லை பெற்றோர்களாகிய உங்கள் பொறுப்பு. இனிமேல்தான் அதிகரிக்கவே போகிறது.

வாகன போக்குவரத்து:

முதலில் மாணவர்களுக்கு அவசியமானது பள்ளிக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதி. அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பெரும்பாலானவை பஸ்கள், வேன்கள் வைத்திருக்கின்றன. இதற்கென்று கட்டணம் வசூலித்து மாணவர்களை ஏற்றி, இறக்கி விடுகின்றனர். 
இதன் மூலம் சற்று தொலைவில் உள்ள பள்ளியில் பிள்ளைகளை சேர்த்த பெற்றோருக்கு இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும். ஆனால், இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.

1. பஸ்சில் அல்லது வேனில் அவசர வழி இருக்கிறதா?
2. டிரைவர் வாகனத்தை வேகமாக இயக்குகிறாரா?
3. வாகனத்தில் உதவியாளர் பிள்ளைகளை ஏற்றி, இறக்க உதவுகிறாரா?
4. உங்கள் வசம் பிள்ளையை ஒப்படைத்து விட்டு செல்கிறாரா?
5. டிரைவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவரா?

என்பது உட்பட்ட விஷயங்களை முக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை டிரைவர், உதவியாளர்களின் செல்போன்கள், முகவரிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் வேன், கார், ஆட்டோக்களை அமர்த்தும் பெற்றோர்களும் மேற்கண்ட விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். பொதிமூட்டைகளை போல மாணவர்களை வாகனங்களில் திணித்து அள்ளி செல்கின்றனரா? அல்லது குறிப்பிட்ட அளவு மட்டுமே மாணவர்களை அழைத்து செல்கின்றனரா என கவனிக்க வேண்டும்.

ஆட்டோக்களில் அனுப்பும்போது டிரைவர்கள் பக்கத்தில் மாணவ, மாணவிகளை அமர வைக்க அனுமதிக்க கூடாது. முக்கியமாக பெண் குழந்தைகளை அனுமதிக்கவே கூடாது. குறைந்த பட்சம் டிரைவர்கள் 30-40 கிமீ வேகத்தில் செல்ல பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் டிரைவர்களுக்கு அறிவுறுத்தலாம். முக்கியமாக, அழைத்து வர முடியாத தகவலை டிரைவர்கள் கண்டிப்பாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். விடுமுறையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ததோடு வேலை முடிந்தது என வருவாய்த்துறை அதிகாரிகள் அமைதியாக இருந்து விடக்கூடாது. தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

போக்குவரத்து போலீசாரும் பள்ளி வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றி செல்கின்றனரா என பார்வையிட வேண்டும். அதிகளவு ஏற்றி சென்றால் உடனே அபராதம் விதிக்கவேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. மேலும், பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், வகுப்பறையில் காற்றோட்டம், கழிப்பறை வசதிகள் திருப்திகரமாக உள்ளதா என மாணவர்களிடம் பெற்றோர் கேட்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு நாளும் பள்ளியில் நடந்த அன்றாட நிகழ்வுகளை மாணவர்களிடம் பெற்றோர் பகிர்ந்து கொள்வது மிகமிக முக்கியம்.

வெயிலில் காயும் குளிர்பானம் உயிருக்கு எமனாகும் வாய்ப்பு-அறிவியல் உண்மைகள்


வெயிலில் படும்படி வைக்கும் தண்ணீர், குளிர்பானங்களை பயன்படுத்தினால் பிளாஸ்டிக் ரசாயனம் கலக்கும் அபாயம் உள்ளது" என விழிப்புணர்வு  பிரசாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சேலாஸ் கிராமத்தில் நேற்று நுகர்வோர் விழிப் புணர்வு பிரசாரம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லசாமி தலைமை வகித்தார். குன்னூர் வட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி வரவேற்றார். ஊர் தலைவர் குமார், கவுன்சிலர் ராம்சுந்தர் முன்னிலை வகித்தனர். குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மகளிர் கல்லூரியின் நுகர்வோர் மன்ற மாணவியரின் குறு நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

நுகர்வார் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் பேசுகையில், "குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கடைகளில், வெயிலில் படும்படியாக வைத்தால் அவற்றில் பிளாஸ்டிக் ரசாயனம் கலப்பு ஏற்பட்டு உடல் நிலை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெயிலில் காயும் குளிர்பானம் உயிருக்கு எமனாகும் வாய்ப்புள்ளது.

மொபைலில் 20 நிமிடத்திற்கு மேல் பேசுபவர்களுக்கு மூளையில், பாதிப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளை மொபைலில் பேச வைப்பதை தவிர்க்க வேண்டும். உயிருக்கும் உடமைக்குமான பாதுகாப்பு, தேர்ந்தெடுக்கும் உரிமை, தகவல் பெறுவது, நிவாரணம், கல்வி, தூய சுற்றுச்சூழல் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு நுகர்வோரிடம் அனைத்து உரிமைகள் இருக்கிறது. இவற்றை பயன்படுத்த வேண்டும்" என்றார்.

தெரிந்த விஷயம.. தெரியாத உண்மை...!


* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்...!