Tuesday, 5 August 2014

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...



இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாத நபர்களை பார்ப்பது மிக அரிதாக ஆகிவிட்டது . விலை மலிவாக கிடைப்பதும் , போன் இல்லை என்றால் அது என்னவோ மரியாதை குறைவான விஷயம் என்ற காரணத்தால் அனைவரும் போன் வைத்துள்ளோம் . இப்போது சந்தையில் அதிகம் விற்பனை ஆவது SMART PHONE எனப்படும் ANDROID MOBILE தான் .

இதில் பலவகையான APPLICATIONS இருக்கின்றது . நமக்குதேவையானத்தை நாம் தெரிவு செய்து கொள்ளலாம் . பல ஆயிரக்கணக்கான அப்ளிகேஷங்களில் நமக்கு தேவையானது எது ? நான் கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டியது எது ? என ஒரே குழப்பமாக இருக்ககலாம் . எனக்கு தெரிந்த சில ஆப்ளிகஷன்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன் . உங்களுக்கு பிடித்ததை எடுத்து கொள்ளுங்கள் .




1.TAMIL NEWS LIVE :

இதில் கூகிள , தினமலர் , தினமணி , தினகரன் , மாலைமலர் ,ஒன் இந்தியா , தமிழ்முரசு , நக்கீரன் , விகடன் , தின பூமீ போன்ற நாளிதழிகளின் செய்திகளை படிக்கலாம் . செய்திகளை முக்கிய செய்தி , அரசியல் , விளையாட்டு , சினிமா என பிரித்து அளிக்கின்றது இது .

2.TAMIL RADIO :

 உங்கள் மொபைல் முலம் ON-LINE இல் பாடல்கள் கேட்க உதவுகிறது இது . A9RADIO HD, AIR TAMIL RADIO, CTBC, EXTAMIL , ILC TAMIL , ISAIARUVI.COM, KATHAAL FM, TRT TAMIL OLI போன்ற பல ரேடியோகளை கேட்கலாம் . முக்கியமாக நமது நண்பர் நீருபன் அவர்களின் புரட்சி FM கூட இதில் உள்ளது .

3.FREE SMS INDIA 4.4

இலவசமாக SMS அனுப்ப மிக சிறந்த Appliction இது . நீங்கள் கீழ்கண்ட ஏதாவது ஒரு தளத்தில் கணக்கு வைத்திருந்தால் போதும் .

WAY2SMS
ULTOO
INDIAROCKS
FULLONSMS
160BY2

4.YUPPA TV

இந்திய தொலைக்காட்சிகளை நேரலையாக தரும் Appliction இது . இதைWI-FI முலம் பயன்படுத்தினால் நன்று .

5.PUTHIYA THALAIMURAI

இப்போது தமிழில் பிரபலமாகிவரும் புதியதலைமுறை செய்தி சேனலின் Application ஆகும் . இதை மட்டும் http://www.puthiyathalaimurai.tvஎன்ற தளத்தில் தரவிறக்க வேண்டும் .

6.NIMBUZZ

CHAT செய்வதில் விருப்பம் உள்ளவர்களுக்கான Appliction இது . உங்கள்FACEBOOK, GMAIL கணக்கில் உள்ளவர்களுடன் பேசலாம் . GTALK இல் உள்ளவர்களுடன் இலவசமாக பேசலாம் .

7.WECHAT

இதுவும் CHAT  செய்ய உதவும் Appliction தான் . இதில் உள்ள வசதி இந்தAppliction பயன்படுத்தும் மற்ற பயனாலர்களுடன் இலவசமாக பேசலாம் .

    8.INDIAN CALLER INFO 

இது உங்களுக்கு வரும் அழைப்பு எந்த நெட்வொர்க் சார்ந்தது என அறிய உதவும் . இதை இன்ஸ்டால் செய்து விட்டால் தானாகவே நீங்கள் அழைக்கும் போதும் உங்களுக்கு அழைப்பு வரும் போதும் நெட்வொர்க் பெயர் வந்து விடும் .

9.GOOGLE DRIVE

நாம் சாதாரண DESKTOP COMPUTER இல் பயன்படுத்தும் அதே அப்ளிகேஷன் தான் இது . கணினி இல்லாமலே உங்கள் பைல்களை உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தலாம் பிறருடன் பகிரலாம் .

10.GALLERY LOCK

உங்கள் மொபைல்லில நீங்கள் வைத்திருக்கும் படங்கள் ,விடியோகளை மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்க இது பயன்படுகிறது .

11.PDANET 3.50

உங்கள் மொபைல் மூலம் உங்கள் கணினியில் இணையம் பயன்படுத்த சிறந்த அப்ளிகேஷன் இது . சாதாரண மொபைல்களுக்கு  PC SUITEபயன்படுவது போல ஆன்ட்ராயட போன்களுக்கு இது .

12.TAMILVISAI

உங்கள் போனில் தமிழ் டைப் செய்ய மிக சிறந்த அப்ளிகேஷன் இது .GOOGLE INDIC போலவே செயல் படுவதால் நீங்கள் எளிதில் தமிழ் அடிக்கலாம் .

குறிப்பு : இவை அனைத்தும் google play store இல் இலவசமாக கிடைக்கும் 

No comments: