நாம் நமது கணினியில் அன்றாடம் பயன்பாட்டுக்காக பல வகையான மென்பொருள்களை வைத்திருப்போம் . அவற்றில் பெரும்பாலானவை இலவச மென்பொருள்தான் . அனைத்து மென்பொருளையும் பணம் கொடுத்து வாங்கினால் கணினியின் விலையைவிட மென்பொருள் விலை அதிகமாக போய்விடும் . எனவே தான் நாம் இலவச மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் .
இன்று இந்த பதிவில் நமக்கு அடிக்கடி தேவைப்படும் சில மென்பொருள்களை அளித்துள்ளேன் . இவை உங்களிடம் ஏற்கனவே இருக்கலாம் . ஆனால் இது புது பதிப்பு . எனவே இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் .இலவசம் என்பதால் வைரஸ் பயம் வேண்டாம் . நானும் இதை பயன்படுத்துகிறேன் .
- VLC PLAYER (NEW VERSION)
கணினியில் படம் பார்க்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த மென்பொருள் இது . மிக சிறிய ஆனால் அழகான, வேகமான மென்பொருள் இது . கடந்த பதிப்பை விட இதில் பல நல்ல விஷயங்கள் உள்ளன . தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் .
===========================================================================
- CODEC FOR ALL
கணினியில் உள்ள விடியோக்கள் நல்ல முறையில் இயங்க உதவும் மென்பொருள் தொகுப்பு இது . இதுவும் புதிய பதிப்பு தான் . தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்
=========================================================================
- POWER POINT TO VIDEO CONVERTER
நீங்கள் உங்கள் ஆபிஸ் தொகுப்பில் உள்ள பவர் பாயின்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை விடியோவாக மாற்றும் அற்புத மென்பொருள் இது . இதன் மூலன் உங்கள் எண்ணங்களை அழகான விடாயோ தொகுப்பாக மாற்றலாம் . மிகவும் எளிதானது இது .
======================================================================
- UTORRENT
திரைப்படங்களை தரவிறக்க உதவும் மென்பொருள் இது . திரைப்படம் மட்டும் இல்லாமல் நிறைய மென்பொருள்கள் கூட கிடைகிறது . இதில் உள்ள பெரிய வசதி என்னவென்றால் கணினி துவங்கியதும் இதுவும் துவங்கும் . எனவே டவுன் லோட் செய்ய நீங்கள் இருக்க வேண்டியதில்லை . தரவிறக்கும் போது மின்தடை வந்தாலும் நீங்கள் பயப்பட வேண்டாம் , கடைசியாக எங்கு தடை பட்டதோ அன்கேருந்தே மீண்டும் தொடரும் .





No comments:
Post a Comment